பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

ஆரவாரம் செய்து; முனிகின்றாள் - கோபிக்கின்றவளாகி; தழங்கும் செந்தீ சிந்த- ஒலிக்கின்ற சிவந்த நெருப்புச் சிந்தி; குன்று கொடு - குன்றுகளைக் கையிலே எடுத்து; கழங்கும் பந்தும் ஆடும் - கழற்சிக் காய்கள் போலவும், பந்து போலவும் விளையாடி; கரம் ஓச்சி - தன் கைகளை ஓங்கி; அடித்தாள் - அநுமனை அடித்தாள்.

***

அடியா முன்னம் அங்கை
        அனைத்தும் ஒரு கையால்
பிடியா, “என்னே!பெண் இவள்!
        கொல்லிற் பிழை” என்னா
ஒடியான் நெஞ்சத்து ஓர் அடி
        கொண்டான்; உயிரோடும்
இடியேறுண்ட மால்வரை போல்
        மண்ணிடை வீழ்ந்தாள்.

***

அவள் கொடுத்த அடி தன் மீது விழு முன்னே அவனது கைகள் எட்டினையும் தன் ஒருகையால் பிடித்துக் கொண்டான் அனுமன்,அவளைக் கொல்ல விரும்ப வில்லை. ‘இவள் பெண்; ஆதலின் இவளைக் கொல்வது தவறு’ என்று நினைத்தான். அவளுடைய மார்பிலே ஒரு குத்துவிட்டான். மலைமீது பேரிடி விழுந்து அது உருண்டு விழுவது போலே உயிருடன் பூமியில் விழுந்தாள் அவள்.

***

அடியா முன்னம் - அவள் அடிக்கும் முன்னே; அங்கை அனைத்தும் - அவளுடைய எட்டு கைகளை எல்லாம்; ஒரு கையால் பிடியா - தன் ஒரு கையினாலே பிடித்துக்கொண்டு; என்னே - என்ன இது? இவள் பெண் - இவள் ஒரு பெண்;