பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


“அடே! நீ யார்? போ என்று சொன்னதும் போகாமல் பதில் பேசுகிறாய்! முப்புரம் எரித்த சிவனும் இவ்வூருக்கு வர அஞ்சுவர். அங்ஙனமிருக்க எளிய குரங்காகிய நீ வரத்தக்க ஊர் இதுவோ?” என்று கூறி நகைத்தாள் இலங்காதேவி.

அவளைக் கண்டு அநுமனும் தன் மனத்துளே நகைத்தான்.

“உன்னைக் கொன்றாலன்றி நீ போகாய்” என்று கூறி அநுமன் மீது தனது போர்க் கருவிகளை வீசினாள் இலங்காதேவி.

***

வழங்கும் தெய்வப் பல்படை
        காணாள்; மழை வான் மேல்
முழங்கும் மேகம் என்ன
        முரற்றி முனிகின்றாள்;
கழங்கும் பந்தும் குன்று
        கொடு ஆடும் கரம் ஓச்சித்
தழங்கும் செந்தீச் சிந்த
        அடித்தாள் தகவு இல்லாள்.

அநுமன் மீது வீசிய ஆயுதங்கள் எல்லாம் பயன் இன்றிப் போயின. குன்றுகளை எடுத்துக் கழற்சிக்காய் விளையாடுவது போல் அநுமன் மீது வீசினாள். ஓங்கித் தன் கைகளால் அடித்தாள்.

***

தகவு இல்லாள் - நற்குணமற்றவளான இலங்காதேவி; வீசும் தெய்வப் படைகாணாள் - (தான்) வீசும் தெய்வப் படைகள் எல்லாம் போன இடம் காணாதவளாய்; மேல் வான் முழங்கும் மழை என்ன - மேலேயுள்ள வானத்திலே முழங்குகின்ற மழை கொண்ட மேகம் போல; முரற்றி-

கி, —7