பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137


உருப்பசி - ஊர்வசி என்கிற தெய்வப் பெண்; உடைவாள் ஏந்தினள் - உடை வாளைக் கையிலே ஏந்தியவராய்; தொடர - தன்னைப் பின் தொடர்ந்து வரவும்; மேனகை - மேனகை என்ற தெய்வ மாது; வெள்ளடை உதவ - அருகில் நின்று வெற்றிலை மடித்துக் கொடுக்கவும்; செருப்பினைத் தாங்கித் திலோத்தமை செ ல் ல - திலோத்தமை என்ற தேவ மகள் இராவணனுடைய செருப்புக்களை ஏந்தியவளாய் உடன் செல்லவும்; அரம்பையர் குழாம் புடை சுற்ற - அரம்பையர் கூட்டம் நாலா பக்கமும் சுற்றி வர; கருப்புர சாந்தும் கலவையும் - தான் அணிந்துள்ள பச்சைக் கற்பூரம் சேர்ந்த சந்தனக் குழம்பும், கலவையும்; மலரும் - மலர்களும்; கலந்து - ஒன்று சே ர் ந் து; உமிழ் - வெளியே வீசும்; பரிமளகந்தம் - நறுமணமானது; மருப்பு உடை பொருப்பு ஏர் - தந்தங்களையுடைய மலைகள் போன்ற மாதிரக் களிற்றின் - பெரிய யானையின்; வரி கை வாய் மூக்கிடை மடுப்ப - கோடுகள் அமைந்த துதிக்கை வாய் மூக்கிலே தங்க.

***

நீனிறக்குன் றின் நெடிது உடன் தாழ்ந்த
        நீத்த வெள் அருவியின் நிமிர்ந்த
பானிறப் பட்டு மாலை உத்தரியம் பசப்புறப்
        பசும் பொன் ஆரத்தின்
மாணிற மணிகளிடைப் படர்ந்து வருகதிர்
        இளவெயில் பொருவச்
சூனிறக் கொண்மூச் சுழித்து இடைகிழிக்கும்
        மின் என மார்பில் நூல் துளங்க.


உத்தரீயம் எனும் அங்கவஸ்திரம் அணிந்து வந்தான் அவன். அது எப்படியிருந்தது? நீல நிற மலையிலிருந்து