பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

அழிக்க விரும்பினாலும்; வல்லது - வல்லமை உடையது; அறிந்திருந்து - இதனை நீ அறிந்தும்; சீரிய அல்ல சொல்லி - சிறப்பில்லாத தீய சொற்களைக் கூறி; தலை பத்தும் சிந்துவாயோ - உன் தலைகள் பத்தும் அறுந்து கீழே விழும்படி செய்து கொள்வாயோ?

***


மலை எடுத்து எண் திசை
        காக்கும் மாக்களை
நிலை கெடுத்தேன் எனும்
        மாற்றம் நேரும் நீ
சிலை எடுத்து இளையவன்
        நிற்கச் சேர்ந்திலை
தலை எடுத்து இன்னமும்
        மகளிர் தாழ்தியோ?

“கயிலாய மலையைப் பெயர்த்தேன்; திசைக் களிறுகளை நிலை கலங்கி ஓடச் செய்தேன் என்று பெருமை பேசிக் கொள்கிறாய். அத்தகைய வீராதி வீரன் ஆகிய நீ எங்கள் இளைய பெருமாள் வில்லேந்தி நின்று எனக்குக் காவலிருந்தபோது வந்திலை; அத்தகைய ஆண்மையற்ற நீ இன்னமும் உனது பத்துத் தலைகளுடன் பெண்போல் தலை குனிந்து நிற்கலாமோ? வெட்கமாயில்லை!”

***


மலை எடுத்து - கயிலை மயிலையை நீ எடுத்து; எண்திசை காக்கும் மாக்களை - அட்டதிக்குகளிலும் நின்று பாதுகாத்து வரும் யானைகளை; நிலை கெடுத்தேன் எனும் மாற்றம் நேரும் நீ - அவை நிலைகெட்டு ஓடும்படி செய்தேன் என்று பெருமை பேசும் நீ; இளையவன் - இளைய பெருமாளாகிய லட்சுமணன்; சிலை எடுத்து நிற்க சேர்ந்திலை - வில் ஏந்தி என்னைக் காத்து நின்ற-