பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

விடுவதற்கு இடமாய் அமைந்த; மேரு - மேரு போன்ற திரியம்பகம் என்ற சிவதனுசு; என் துணை கணவன் - எனது வாழ்க்கைத் துணையாகிய இராமனின்; ஆற்றற்கு - வலிமைக்கு; உரன் இலாது - வலிமை இல்லாமல்; இற்று வீழ்ந்த அன்று - ஒடிந்து வீழ்ந்தபோது; எழுந்து உயர்ந்த ஓசை - எழுந்து ஓங்கிய பேரொலியை; கேட்டிலைப் போலும் - நீ கேட்கவில்லை போலும்.

***


அஞ்சினை ஆதலாலே
        ஆண்டகை அற்ற நோக்கி
வஞ்சனை மானொன் றேவி
        மாயையால் மறைத்து வந்தாய்
உஞ்சனை போதியாகில் விடுதி
        உன் குலத்துக் கெல்லாம்
நஞ்சினை எதிர்ந்த போது
        நோக்குமே நினது நாட்டம்

வீரனாகிய இராமன் எதிரே அஞ்சினாய். ஆதலினாலே உனது வஞ்சனையினாலே மான் ஒன்றை ஏவினாய். இராமன் அம் மான் பின்னே சென்றபோது வந்தாய். எப்படி வந்தாய்? உனது உண்மை உருவுடன் வந்தாயா? இல்லை. மாயத்தாலே சந்நியாசி வேடம் பூண்டு வந்தாய். உயிர் பிழைக்க வேண்டுமானால் என்னை நீ அவரிடம் சேர்ப்பாய்.

***


அஞ்சினை - இராமன் எதிரே வர நீ பயந்தாய்; ஆதலாலே ஆகையினாலே - வஞ்சனை; மான் ஒன்று ஏவி - வஞ்சகமாக மாயமான் ஒன்றை ஏவிவிட்டு; ஆண்டகை - இராமன்; அற்றம் நோக்கி - இல்லாத சமயம் பார்த்து; மாயையால் மறைத்து வந்தாய் -நீ கற்ற மாயை வித்தையால் உன் உருவத்தை மறைத்து