பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தோள்கள் பூரிக்கப் பெற்றாள். குளிர்ந்தனள் - மகிழ்ச்சியால் உள்ளம் குளிரப் பெற்றாள்; மெலிந்தனள் - இராமனை அடையாததால் ஏங்கி மெலிந்தாள்; வெதுப்போடு ஏங்கினள் - வாட்டமுற்று ஏங்கினாள்; உயிர்த்தனள் - பெருமூச்சு விட்டாள்; இது இன்னது எனல் ஆமே - பிராட்டி அடைந்த நிலை இன்னது என்று சொல்லாகுமோ?

***


மோக்கும்; முலை வைத்து உற
        முயங்கும்; இழி நன்னீர்
நீக்கி நிறை கண் இணை
        ததும்ப நெடு நீள
நோக்கும்; நுவலக் கருதும்;
        ஒன்றும் நுவல் கில்லாள்;
மேக்கு நிமிர் விம்மலள்;
        விழுங்கல் உறுகின்றாள்.

அதை முகர்வாள்; மார்பில் அணைப்பாள்: ஆனந்தக் கண்ணீர் சொரிவாள்; அதைத் துடைப்பாள். மேலும் அக் கண்ணீர் பெருகும். அதோடு அந்த மோதிரத்தையே நீண்ட நேரம் உற்று நோக்குவாள்; அதோடு பேச விரும்புவாள். பேசாது மெளனமாயிருப்பாள். ஓயாமல் விம்முவாள். அந்த விம்மலை அடக்கி விழுங்க முயல்வாள்.

***

மோக்கும் - அம் மோதிரத்தை கூர்ந்து பார்ப்பாள்; முலை வைத்து உற முயங்கும் - தனங்களின் மேலே வைத்து நன்றாகத் தழுவிக் கொள்வாள்; இழி நின்ற நல் நீர் நீக்கி - கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்து பின் அதைத் துடைப்பாள்; கண் இணை ததும்ப - இரண்டு கண்களும் மீண்டும் நீர் சொரிய; நெடு நீள நோக்கும் - நீண்ட நேரம்