பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பகைத்துக் கோபிக்க; பருவரற்கு ஒருவன் ஆகி - துன்பத்திற்கு ஆளாகி; அருவி அம் குன்றில் - அருவிகள் நிறைந்த இந்த அழகிய குன்றில்; எம்மோடு - எங்களோடு; இருந்தனன் - இருந்து வருகிறான்; வருவது ஓர் அமைவின் - அவன் பால் செல்வம் வருவது போல் வந்தீர்.

***


‘யார் என விளம்புகேன் நான்
        எம் குலத் தலைவற்கு உம்மை?
வீரர் நீர் பணித்திர்’ என்றான்
        மெய்ம்மையின் வேலி போல்வான்
வார் கழல் இளைய வீரன்
        மரபுளி வாய்மை யாதும்
சோர்வு இலன் நிலைமை எல்லாம்
        தெரிவுறச் சொல்லல் உற்றான்.

“எங்கள் குலத் தலைவனாகிய சுக்கிரீவனிடம் சென்று என்ன சொல்வேன்? உங்களை யார் என்று சொல்வேன்? வீரர்களே உத்தரவு தாருங்கள்” என்றான். யார்? சத்தியத்தின் வேலி போன்றவனாகிய அநுமன்.

மதிப்புக்குரியவர்களிடத்திலே எவ்வளவு விநயமாகப் பேசுகிறான் அநுமன்! “நீங்கள் யார்? பதில் சொல்லுங்கள். எங்கள் தலைவன் கேட்கிறான்!” என்று கூறவில்லை அநுமன். ஆனால் அவனது கேள்வியிலே அப் பொருள் தொனிக்கிறது.

“உங்களை யாரென்று சொல்வேன்? உத்தரவு தாருங்கள்” என்று கேட்கிறான்.

அந்தக் கேள்வியிலேதான் எத்தகைய மரியாதை! உயர் பண்பு!