பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

உற்ற எமக்கு - உன்னை எதிர்ப்பட்ட எங்களுக்கு: நின் சொல் அன்ன . உனது இனிய மொழியே போன்ற; செம் வழி உள்ளத்தானை - நேர் வழி செல்லும் உளமுடைய அந்த சுக்கிரீவனை தெரிய - நாங்கள் தெரிந்து கொள்ளுமாறு; காட்டுதி என்றான் - எங்களுக்குக் காட்டுவாயாக என்று சொன்னான்.

***

இரவி தன் புதல்வன் தன்னை
        இந்திரன் புதல்வன் என்னும்
பரிவு இலன் சீறப் போந்து
        பருவரற்கு ஒருவன் ஆகி
அருவி அம் குன்றில் எம்மோடு
        இருந்தனன்; அவன் பால் செல்வம்
வருவது ஒர் அமைவின் வந்தீர்
        வரையினும் வளர்ந்த தோளிர்.

"குன்றினும் மேலாக வளர்ந்த தோள்களை உடையவரே ! சூரியன் புதல்வனாகிய சுக்கிரீவனை இந்திரன் புதல்வனாகிய வாலி சீறினான்; பகைத்தான்; அவனால் துன்புற்ற சுக்கிரீவன் இம் மலைக்கு ஓடி வந்தான்; எங்களோடு வாழ்ந்து வருகிறான். அவனுக்குச் செல்வம் வருவது போல நீவிர் வந்துள்ளீர்.”

[ருக்ஷரஜஸ் எனும் பெண் குரங்குக்கு இந்திரன் அருளாலே பிறந்தவன் வாலி. வாலில் தோன்றியவன் வாலி.]

***

வரையினும் - மலைகளைவிட: வளர்ந்த - வளர்ந்து விளங்கும்; தோளிர் - தோள் உடையோரே! இரவி தன் புதல்வன் தன்னை - சூரியனின் மகனாகிய சுக்கிரீவனை: இந்திரன் புதல்வன் - இந்திரன் மகனாகிய வாலி; என்னும் பரிவு இலன் - எனும் பெயர் கொண்ட அன்பிலான்; சீற –