பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220




யுத்த காண்டம்

கடவுள் வாழ்த்து

“ஒன்றே. என்னின், ஒன்றே ஆம்;
        ‘பல’ என்று உரைக்கின், பலவே ஆம்;
‘அன்றே’ என்னின், அன்றே ஆம்;
        ‘ஆமே’ என்னின், ஆமே ஆம்;
இன்றே என்னின், இன்றே ஆம்;
        ‘உளது’ என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி முடி வாழ்க்கை!
        நமக்கு இங்கு என்னோ
                                      பிழைப்பு? அம்மா!”


ஒன்றே என்றால் ஒன்றே. பல என்றால் பலவே ஆகும். அன்று என்றாலும் அன்றே யாம். இல்லை என்று கூறினும் இல்லையாகும். உள்ளது என்று சொல்லின் உளதே ஆகும். எம்பிரானுடைய இருப்பும் வாழ்க்கை வரலாறும் மிகவும் வியக்குமாறு உள்ளது. எனவே அருவமும் உருவமும் அருவுருவமும், ஆகி எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருளையும், அவனை அவன் தன் அருட்கண் கொண்டே காணக்கூடும் என்ற உண்மையையும், பரம்பொருள் சமயங்கட்கு அப்பாலானது என்பதையும் அதுவே இராமபிரான் என்றும் அவன் அவதரித்த செய்தியையும் அழகுப் பெறக் கூறுகின்றான் கம்பநாடன்.