பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233


தாழ்வு இல்லா ஞானப் பொருளைத் தரும் தருமமே வடிவாக உள்ள இராமனைக் காண்பதே இப்பொழுது செய்யத்தக்க கடனாகும். இதைப்போல சிறப்பமைந்த செய்கை வேறு ஒன்றும் இல்லை; என்று கல்வியறிவாற் சிறந்த, ஆலோசனைக்கு உரியவராகிய, அமைச்சர்களும் துணிந்து சொன்னார்கள்.

***

தாட்சி இல் பொருள் தரும் தரும மூர்த்தியை- எவ்வகையான தாழ்வும் இல்லாத உறுதிப் பொருள்களை அளிக்க வல்ல அறக்கடவுளான இராமபிரானை; காட்சியே இனி கடன் - தரிசித்தலே இனி நாம் செய்யவேண்டிய கடமை; மாட்சிமையின் அமைந்தது - பெருமையுடன் கூடியதும் (அதுவேயாம்); மற்று வேறு இலை - பிறிதொன்றும் இல்லை; என்று - என்று; கல்வி சால் சூட்சியின் கிழவரும் துணிந்து சொல்லினார் - ஆலோசனைக்குரியவரான அமைச்சர்களும் தெளிவாகச் சொன்னார்கள்.

***

(விபீடணன் அவர்கள் சொன்னதை ஆமோதித்தான். இரவு வந்தது. அவர்கள் ஓரிடத்தில் தங்கினர்.)

கடற்கரையில் இருந்த இராமன் இயற்கைக் காட்சிகளை கண்டான். அன்னையின் குவளைக் கண்களையும் பவளச் செவ்வாயையும் அவை நினைவூட்டின. சோலைகளைப் பார்த்தான். விரக தாபத்தால் வேதனைப்பட்டான். மனம் சோர்ந்தான். ஆணும் பெண்ணுமாக உறங்கும் அன்னப் பறவைகளைக் கண்டான். தன்னையும் அறியாது பெருமூச்சு விட்டான். ஆண் பறவை உணவு கொண்டுவரச் சென்றது. அது வரும் திசையை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பெட்டை நாரையை கண்டபோது அவன் வேதனை அதிகரித்தது. இதனிடையே ஒரு பெண்