பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

295

முடியும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்தான். அந்த யாகத்தை தடுப்பான் அநுமன். எனவே அநுமனைத் திருப்ப எண்ணி மாயம் செய்தான். சீதையை போல் மாயையால் ஒரு உருவத்தை செய்தான், அநுமன் எதிரில் அவ்வுருவத்தை வெட்டினான். அயோத்திமீது படையெடுக்கப் போவதாகச் சொல்லி, அநுமனை நம்பவைத்தான். விமானத்திலேறி நிரும்பிலைச் சென்றான்.

மாருதியின் மூலம் இந்திரசித்து சீதையை மாய்த்ததையும் பிறவற்றையும் அறிந்த அண்ணலும் இளையவனும் வேதனையால் துடித்தனர். அயோத்தியைக் காக்க துடித்தனர். இச்சந்தர்ப்பத்தில் அங்கு வந்த விபீடணன், ‘இது இந்திரசித்தின் மாயை எனக் கருதுகிறேன். நான் உண்மை அறிந்து வந்தபின் செய்ய வேண்டியதைச் செய்வோம்’ என்று கூறி, வண்டு உரு கொண்டு அசோகவனம் சென்றான். அன்னை இனிது இருப்பதைத் திரும்ப வந்து இராமனிடம் கூறினான். நிரும்பிலையில் இந்திரசித்து செய்யும் வேள்வி பற்றியும் விரிவாகக் கூறினான். லட்சுமணன் விபீடணனுடன் நிரும்பிலைச் சென்றான். வானர சேனையும் உடன் சென்றது.

***


கடல் வற்றின மலை உக்கன
        பருதிக் கனல் கதுவுற்று
உடல் பற்றின மரமுற்றன
        கடல் பற்றின வுதிரம்
சுடர் பற்றின சுறு மிக்கது
        துணி பட்டுதிர் கணையின்
திடர்பட்டது பரவைக் குழி
        திரியுற்றது புவனம்.