பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296



லட்சுமணனும் இந்திரசித்தும் ஒருவர் மீது ஒருவர் வீசியபாணங்களால் கடல்கள் வற்றின; மலைகள் பிளந்தன. சூரியனே பற்றி எரிந்தான்; இரத்த நாற்றம் எங்கும் பரவியது; வற்றிய கடல்களால் ஏற்பட்ட பள்ளங்களை அம்புச்சரங்கள் மேடாக்கின. பூமியே அலையலாயிற்று.

***

கடல்வற்றின - (அவ்விருவரும் எய்த அம்புகளால்) கடல்கள் எல்லாம் நீர்வற்றின; மலை உக்கன - மலைகள் பிளவு பட்டன; பருதி கனல் கதுவுற்று உடல் பற்றின - சூரியனுடைய உடல் முழுதும் கனலால் கதுவப்பட்டு பற்றி எரிந்தன; மரம் உற்றன கனல் பட்டன - தீயினால் தகிக்கப்பட்ட மரங்கள் அழிந்தன; உதிரம் சுடர்பற்றின சுறு - இரத்த நாற்றம்; மிக்கது - மிகுந்தது; துணிபட்டு உதிர் - துண்டிக்கப்பட்டு உதிர்கின்ற; கணையின் - அம்புகளாலே; பரவைக் குழிகடலாகிய குழிந்த இடம்; திடர் பட்டது - மேடாகிவிட்டது. புவனம் - பூமி; திரியுற்றது - சுழலத் தொடங்கியது.

***


புரிந்தோடின; புகைந்தோடின
        பொரிந்தோடின புகை போய்
எரிந்தோடின கரிந்தோடின
        விடமோடின வலமே
திரிந்தோடின செறிந்தோடின
        விரிந்தோடின திசை மேல்
சரிந்தோடின கருங்கோளரிக்கு
        இளையான் விடுசரமே.

நிரும்பிலையில் இந்திரசித்துக்கும் லட்சுமணனுக்கும் கடும்போர் நிகழும்போது, லட்சுமணன் விடும் அம்பு சரங்களுள் சில வளைந்தோடின; இன்னும் சில புகை கக்கிக் கொண்டே ஓடின; வேறு சிலவோ தீப்பொறி சிதற ஓடின.