பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

313

வேகம் பொருந்திய அம்பு மழையை விகைத்தபடி, மகோதரன் ஆகாயம் இற்றும் திக்குகளெல்லாம் கிழியும்படி ஆரவாரஞ் செய்ததைக் கண்ட தூயவனான இராமன் புன்னகை பூத்தான்.

***

(மகோசுரன்). அசனி ஏற இருந்த கொற்ற கொடியின் மேல் - (இந்திரன் இடமிருந்து வந்த தெய்வத் தேரின்) பேரிடி எழுதப் பெற்றிருந்த வெற்றிக் கொடியின்மீதும்; அரவம் தேர்மேல் - ஒலி மிக்க அந்தக் தேரின் மீதும்; குசை உறு பாகன் தன்மேல் - கடிவாளத்தைக் (கையில்) கொண்ட பாகனான மாதவியின்மீதும்; கொற்றவன் - வெற்றியோனான இராமபிரானின்; குலவு - விளங்குகின்ற; தோள் மேல் - தோள்களின்மீதும்; விசை உறு பகழி மாரி - வேகம் நிறைந்த அம்பு மழையை; வித்தினான் - விதை தெளிப்பது போல் தூவினான்; (மேலும்) விண்ணினொடு திசைகளும் கிழிய - வானமும் திசைகளும் கிழிந்து போகுமாறு; ஆர்த்தான் - முழக்கம் செய்தான்; தீர்த்தனும் - தூயவனான இராமபிரானும்; முறுவல் செய்தான் - புன்சிரிப்புச் செய்தான்,

***

ஏன்? பின் நிகழ்ச்சியை அறியாது ஆர்ப்பரிக்கின்றானே என்று அவன் தன் ஆணவம் கண்டோ?

***


வில் ஒன்றால், கவசம் ஒன்றால்,
        விறலுடைக் கரம் ஓர் ஒன்றால்,
கல் ஒன்று தோளும் ஒன்றால்,
        கழுத்து ஒன்றால், கடிதின் வாங்கி,