பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

317

போகவும்: வெற்றி கால் - வெற்றியையுடைய (ஊழிக்) காற்று; கிளர்ந்து - மேலெழுந்து; உடற்றும் காலை - வருந்தும்போது; வடவரை முதல ஆன - வடக்கேயுள்ள மலையான மேரு முதலிய; மலைக்குலம்- மலைக் கூட்டங்கள்; சலிப்பமான - அசைவனபோல; சுடர்மணி வலயம் சிந்த - ஒளிவிடும் மணிகளழுத்திய வாகு வலயங்கள் சிதறுமாறு; இடத்த பொன் தோள் துடித்தன - இடப் பக்கத்திலுள்ள அழகிய தோள்கள் துடித்தன.

***

துர்நிமித்தங்களைப் பொருட்படுத்தவில்லை இலங்காதிபன். மாறாக இன்னும் மும்முரமாக பொருகிறான். இப்போர் எத்தன்மையது? கருமத்திற்கும் ஞானத்திற்கும் போர்; தீமைக்கும் நன்மைக்கும் நடக்கும் போர்; அதருமத்திற்கும் தருமத்திற்கும் நடக்கும் போர். இப்போருக்குக் கம்பன் எத்துணை அருமையான உவமைகளைத் தருகிறான்! ஆதிசேடனும் கருடனும் பொருதது போலவும், நரசிம்மமும் இரணியனும் பொருதது போலவும் இராமனும் அரக்கர்கோனும் பொருதணர் என்று வருணிக்கிறான். இராவணன் சங்கு ஊதுகிறான். ஆனால் திருமால் சொரூபமான இராமனின் வலம்புரி சங்கோதானே ஒலிக்கின்றது.தேர்க்கொடிகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன? வெல்பவர் யார்? தோற்பவர் யார் என்று தெளிவாக இல்லாத நிலை.

சினங்கொண்ட இராவணன் ஆணவத்துடன் மொழிகிறான்.

***


குற்றம் விற்கொடு கொல்லுதல்
        கோள் இலாச்
சிற்றை யாளனைத் தேவர் தம்
        தேரொடும்