பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

327

முன்னாளிலே; விபீடணனார் சொல் - விபீடணன் சொன்ன நல்லுரையை; நினைவுற்றான் - மனத்திற்கருதி நின்றான்.

***

“யாராயிருந்தால் என்ன? என் தனிப்பட்ட வீரத்தால் அவனை வெல்வேன்; எடுத்தக் காரியத்தை முடித்தே தீருவேன்; பின்வாங்க மாட்டேன்,” என்று உறுதி பூண்டு நிருருதி என்ற திக் பாலகருடைய படையை இராமன்மீது எய்தினான்.

***

‘ஆயிடை அரக்கனும், அழன்ற
        நெஞ்சினன்,
தீயிடைப் பொடித்து எழும்
        உயிர்ப்பன், சீற்றத்தன்,
மா இரு ஞாலமும்
        விசும்பும் வைப்பு அறத்
தூயினன், சுடு சரம் உருமின்
        தோற்றத்த.

நிருருதி படைகளை எரித்தது இரகுவீரன் ஏவிய கருடக்கணை. இந்தத் தோல்வி இராவணனின் ஆணவத்தை இன்னும் தூண்டியது. கோபக்கனல் சிந்தும் பெருமூச்சு விட்டான். இந்த உலகம், வானம், வெற்றிடம் எதுவுமே இல்லாது அழிந்துபோகட்டும் என இடியோசையுடன் கூடிய சரங்களைத் தூவினான்.

***

ஆயிடை - அப்போது; அரக்கனும் - இராவணனும்; அழன்ற நெஞ்சினன் - வேகின்ற நெஞ்சினனாய்; தீ - நெருப்பானது: இடை-இடையே; பொடிந்து எழும் - பொடியாகச்