பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

117

நின்ற ராமன் வாலி மீது அம்பெய்து அவனை வீழ்த்துகிறான். அதன்பின் வாலியும் மண்மீது விழுந்து விடுகிறான். மறைவிடத்தை விட்டு வெளிவந்த ராமனைக் கண்டு வாலி பேசும் பேச்சுக்கள் எல்லாம் ராமன் புகழைக் குறைக்கின்றன. அதை எல்லாம் விளக்கில் பெருகும். கடைசியில் ராமன் தன் சுய உருவை வாலிக்குக் காட்ட

மேல் ஒரு பொருளும் இல்லா
     மெய்ப்பொருள் வில்லும் தாங்கி
கால்தரை தோய நின்று
     கட்புலனுக்கு உற்றது அம்மா

என்று நிறைந்த மனத்தோடு வாலி முத்தி எய்துகிறான். அதுவரை போர்க்களத்துக்கு வராத தாரை அதன்பின் தான் வருகிறாள். வாலியின் ஆற்றலையும் அவனது சிவ பத்தியையும் நினைந்து நினைந்து புலம்புகிறாள். தனக்கு ஆர்பாகனை ஆசைதோறும் உற்று வணங்காநாள் மலர்தூவி வணங்கும் அவனது தெய்வ பக்தி எல்லாம் இனி என்ன ஆவது என்றே புலம்புகிறாள். இடையிடையே தான் தடுத்தும் கேளாமல் போர்க்களம் புகுந்த வாலிக்காக மிகவும் வருந்துகிறாள் என்றாலும், ராமனைப் பற்றிக் குறைவாகவே பேசக் காணோம். அது அவள்தன் சிறந்த பண்பையே குறிக்கிறது. இத்துடன் இரண்டாவது காட்சி முடிகிறது.

இதன்பின் நாம் தாரையை மூன்றாவது தடவையாகவும் சந்திக்கிறோம். சுக்ரீவபட்டாபிஷேகம் நடத்தி பின் கார்காலம் வந்துவிட்டதால் சீதையைத் தேடுவதை கார்காலம் கழியும் மட்டும் ஒத்தி வைக்கிறார்கள். சுக்ரீவன் கிஷ்கிந்தையில் அரண்மனையில் வசிக்கிறான். உல்லாசமான கேளிக்கைகளில் திளைக்கிறான். கார்காலம் கழிந்து விடுகிறது. சுக்ரீவன் வந்து ராமனைப் பார்க்கவில்லை. இராமனோ அவனைச் செய் நன்றி கொன்றவனாகவே கருதுகிறான். லக்ஷ்மணனை அனுப்பி சுக்ரீவனை அழைத்துவரச் செல்கிறான். லக்ஷ்மணனுக்கும் ஒரே