இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
31
- அறந்தலை நிறுத்தி, வேதம்
- அருள் சுரந்து அறைந்த நீதி
- திறம் தெரிந்து, உலகம் பூணச்
- செந்நெறி செலுத்தி, தியோர்
- இறந்துக நூறி, தக்கோர்
- இடர்துடைத்து ஏக, ஈண்டு
- பிறந்தனன், தன் பொற்பாதம்
- ஏத்துவார் பிறப்பறுப்பான்
- அறந்தலை நிறுத்தி, வேதம்
என்று முத்தாய்ப்பு வைத்தேன். இதைவிட நான் வணங்கிய தெய்வத்தைப் பற்றி நான் எப்படித்தான் சொல்ல நான் விரும்பிய பாத்திரம் அனுமன். நான் வணங்கிய தெய்வம் ராமன் – போதுமா!
இனி நான் கண்ட கனவுகள்
கம்பன் – இதுவரை நான் சொல்லியதிலிருந்தே என்னுடைய லக்ஷியங்கள் என்ன என்ன என்பதை அறிந்திருப்பாய். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறம் என்றானே அந்த அறம் வழுவாது மக்கள் வாழவேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் நீதியும் தருமமும் நிறுவத் தோன்றியவனைப் பாராட்டினேன். சேணுயர் தருமத்தின் தேவை செம்மையின் ஆணி என்றேன்.
- அறம் துணை ஆவதல்லால்
- அருநரகம் அமைய நல்க
- மறம் துணையாக மாளாப்
- பழியொடும் வாழமாட்டேன்
- அறம் துணை ஆவதல்லால்
என்று பாத்திரங்களைக் கூற வைத்தேன். இதையே திரும்பத் திரும்ப காவியம் முழுவதும் வலியுறுத்திக் கொண்டே போனேன். “அறங் கடந்தவர் செயல் இது” என உலகம் ஆர்க்கும் வகையில் இராவணன் வாழ்க்கையை உருவாக்கிக் காட்டினேன். எத்தனையோ நல்ல குணங்களும்