பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

கம்பன் சுயசரிதம்


அவனுடைய சகாக்களுடன் நரகத்தில் கிடந்து உழலும் அவன் எழுந்து தன் சகாக்களைப் பார்த்தே பேசுகின்றான். அவன் பேச்சு அவன் தன் மனோவலிமையைக் காட்டுகிறது. அந்த நேரத்திலும் அந்தப் பேச்சை மில்டன் வெகு அழகாகத்தான் சொல்லியிருக்கிறான் அவனுடைய காவியத்திலே.

இன்பத்தையும் துன்பத்தையும் உருவாக்குவதெல்லாம் மனம் தானே. தான் இருக்கும் நிலையில் இருந்து கொண்டே சுவர்க்கத்தை நரகமாக்கும், நரகத்தைச் சுவர்க்கமாக்கும் அது. அதனால் நமக்கென்ன? நாம் மட்டும் மன உறுதியைத் தளரவிடாமல் இருந்தால் அந்தக் கடவுளை அவர் சிருஷ்டித்தபடி பெரியவராக ஆக்கியிருக்கலாம். அதனால் நாம் ஏன் அவருக்குத் தணிந்து போக வேண்டும். இங்காவது நாம் சுதந்திரமாக வாழலாம். இங்கே நாம் இருப்பதைக் கண்டு அந்தக் கடவுள் பெருமைப்படவும்மாட்டான். இங்கிருந்து நம்மைத் துரத்தவும் செய்யான். இங்கே நம்முடைய ஏகச் சக்ராதிபத்யம்தான். அரசாள வேண்டியதுதானே நமது குறிக்கோள். அது நரகத்திலேயானாலும் சரி தான். சுவர்க்கத்திலே அடிமையாக வாழ்வதைவிட நரகத்தில் அரசனாக இருப்பது மேல்தானே என்பதுதான் சாத்தானின் ரணரங்கப் பிரசங்கம். இதைப் படித்தவர்கள் எல்லாம் (High water mark of poetry) உயர்ந்த கவிதை, கருத்து கருத்தின் அர்த்த கவுரவ முதிர்ச்சியும் கவிதா நடையின் உன்னதமும் மில்டனுக்கு ஒரு பெரிய ஸ்தானத்தையே அல்லவா அளிக்கிறது கவிதை உலகிலே, என்றெல்லாம் பாராட்டப்படுகின்றார்கள்.

இதைப் போலவே ஒரு சந்தர்ப்பம் நமது கம்பனுக்கு வாய்த்தால் அவன் எப்படிச் சொல்லுவான்? மகா கவியாகிய கம்பனுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்க்கத்தான் செய்கிறது. அவன், ஆளப் பிறந்தவன் நான், அது நரகம் ஆனாலும் சரி சுவர்க்கம் ஆனாலும் சரி என்று மட்டும் சொல்லித்