பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

கம்பராமாயணம்



யும் கண்டான்; ‘அனைவரும் மடிந்துவிட்டனர்’ என்று நம்பிவிட்டான், புலம்பி, நைந்து, செயலிழந்து மயக்கம் உற்றான்; செத்தாருள் ஒருவனாய் மதிக்கப்பட்டான்.

செய்தி அறிந்து இராவணன் வெற்றிப் படை கொட்டச் செய்து, விழாக் கொண்டாடினான். அரக்கர் பிணம் அத்துணையையும் ஆழ்ந்த கடலில் போடச் செய்து அவர்கள் சுவடு தெரியாமல் மறைத்தான். அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பி, அஞ்சலி செய்தற்கு அடையாளம் மட்டும் அமைத்துக் கொடுத்தான்.

சீதைக்குச் செய்தி சொல்ல வைத்து அவள் மங்கல நாண் களைதற்காக மயக்கமுற்ற இராமன்முன் கொண்டு வந்து அவளை நிறுத்தினான்.

“இப்பொழுது என்ன சொல்கிறாய்?” என்ற கேள்விக் கணையை எழுப்பிவிட்டான்.

அப்பொழுதும் அவள், அதை முழுமையாய் நம்பவில்லை; உறுதிகொண்ட நெஞ்சினளாய் விளங்கினாள்; ‘வானரப்படைகள் படுவதும், இலக்குவன் விழுவதும், இராமன் கண்கலங்கி அழுவதும், உயிர் மாய்த்துக் கொள்வதும் நிகழாதன’ என்ற நம்பிக்கை இருந்தது. இராமன் உடம்பில் அடிபட்ட தழும்பு எதுவும் இல்லை, என்பதைத் திரிசடை காட்டினாள்; ‘கொண்டது மயக்கமே யன்றி மரணம் அன்று’ என்று தெளிவித்தாள்.

கைதிகளைப் பாதுகாப்பாய்ப் பார்வையிட அழைத்ததைப் போல அழைத்து வந்த சீதை மறுபடியும் சிறைக்காப்பாய் அசோகவனத்தில் அடைக்கப்பட்டாள்.