பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

231



கடல் நீரைப் பார்த்தான்; அதன் அடியைக் கண்டான்; நாகர் உலகம் ஒளிவிட்டது; கடல் மீன்கள் அவனால் எழுந்த காற்றால் துடித்து இறந்தன; திக்கு யானைகள் எட்டும் திசை தடுமாறி நிலை குலைந்தன; அண்டங்கள் நடுங்கின; அண்டர் வியந்தனர்.

மலை குறுக்கிட்டது

விண்ணில் பறந்தபோது எதுவும் கண்ணில் படவில்லை; கொண்ட கொள்கை அண்ட முகட்டைத் தாவ உதவியது. கடலிலிருந்து மலை ஒன்று முளைத்தது; அது கண்டு அவன் மலைத்துப் போனான்; அவனோடு போட்டி போட்டிக் கொண்டு அஃது உயர உயர நிமிர்ந்தது; இவன் கால்பட்டு அதன் தலை சிதறியது; அது தலை கீழாய் உருண்டது; அசுரன் தலையில் கால் வைக்கும் காளிபோல் அதன்மீது நின்று, காளி நர்த்தனம் ஆடினான்; அது தன் உச்சியை அடக்கிக் கொண்டது; மானுடவடிவம் கொண்டு அவனிடம் வந்து மண்டியிட்டது. அதனை அண்ட ஒட்டாமல் அவன் அகலச் சொன்றான்.

“நீ யார்? ஏன் தொடர்கின்றாய்?” என்று வினவினான்

“நன்றி உடையேன்; அதனால், உன்னை நயக்கின்றேன்” என்றது.

“வெற்றியுடைய செய்தி இருந்தால் சொல்; வேகமாகப் போக வேண்டும்” என்றான்.

“மைந்நாகம் என்பது என் பெயர்; சிறகுகள் பெற்றிருந்தேன்; என் சிறகுகளை அறுக்க இந்திரன்