பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கம்பராமாயணம்



எதிர்க்கச் சென்றவர், நூல் அணிந்த மார்பன் ஆகிய முனிவரைச் சந்தித்தனர்; நொய்ந்த அவர் உடம்பைக் கண்டு அவர் ஆற்றலைக் குறைவாக மதிப்பிட்டனர். அனுமதி கேட்டு கட்டு அவிழ்க்க வேண்டியவர் அவரசப்பட்டுக் குதிரையை மீட்டனர்; அதற்குக் கிடைத்த வெகுமதி அவர் இட்ட சாபம்; வந்தவர் அனைவரும் சாபத்தால் வெந்து சாம்பல் ஆயினர்.

பிற்காலத்தில் சகரனின் சந்ததியார்களுள் ஒருவனான பகீரதன் என்பான் முந்தையோர் கதைகளைக் கேட்டு வேதனை அடைந்தான். ஈமக்கடனும் செய்ய முடியாமையால் அவர்கள் நாமமும் மறைந்து சாம்பலாய் மாறி அவர்கள் சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தது. அவர்கள் சாம்பலை ஒருங்கு திரட்டிப் புண்ணிய நதியின் தீர்த்தத்தை அவற்றின் மீது தெளித்து, அவர்கள் வானுலகு நண்ண அவன் முயற்சி எடுத்துக் கொண்டான். “கங்கை நீர்தான் புனிதம் மிக்கது” என்று சாத்திரம் அறிந்தவர் சாற்றினர்; ஆனால், அது மண்ணுலகில் பாய்வதில்லை; விண்ணவரின் உடைமையாக இருக்கிறது என்பதைப் பகீரதன் அறிந்தான்.

“செத்தவர்களுக்குச் சிவலோகம் தருதற்கு மட்டும் அன்றிப் பாரத நாட்டுக்கு வளமும் வாழ்வும் தர, அந் நதி தேவை” என்பதைச் சிந்தித்து உணர்ந்தான். ‘மேலவர் என்று சொல்லும் தேவர்கள் தம் உடைமை என்று மதித்த அந்த நதியை மண்ணுக்குக் கொண்டு வர முடிவு செய்தான்.

படைப்புகளுக்கு எல்லாம் காரணம் பிரமன் என்பதால் அவனை அணுகினான்; பிரமன் சகல சாத்திரங்