பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 74 > ===== காதலும் பெருங்காதலும் இனி வருந்தி என்ன பயன்? “அருந்ததியைப் போன்ற கற்பில் சிறந்த சீதையைப் பற்றிய துயரத்தை தணித்துக் கொண்டு தேவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வேத நூல் முறைகள் அனைத்தையும் விதிமுறைகளின் படி நிலை நிறுத்தி மற்றுமுள்ள தீமைகளையும் துடைக்க வேண்டிய கடமைகளைச் செய்யுங்கள்’’ என்றும் ஜடாயு கூறுகிறான். இங்கு சீதையைப் பற்றிய கவலையைக் குறைத்து நன்முறைகளை நிலை நிறுத்தித் தீமைகளை ஒழிக்கும் கடமைகளை நிறைவேற்றுங்கள் என்று ஜடாயு இராம இலக்குவர்களுக்கு அறிவுரை கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறு அறிவுரைகள் கூறிவிட்டு பஞ்ச பூதங்கள் அழியும் காலத்திலும் அழியாத இறைவனுலகை அடைந்தான் கழுகரசன் என்று கம்பர் கூறுகிறார். ஆங்கொரு காதல் கட்ட இராமன் வருந்துகிறான். அவனுக்குத் துக்கம் மேலிடுகிறது. அறத்தின் வழிநில்லாத அரக்கனால் சீதையை இழந்தேன். எனது ஆண்மையை இழந்தேன். நான் பிறந்து என்ன பயன், தவம் செய்து என்ன பயன், எனது பெற்ற தாதையைப் போன்ற சடாயுவை இழந்தேன். நான் வாழ்ந்து என்ன பயன், உயிரைத் துறப்பதே மேல் என்று வருந்துகிறான். சீதையைப் பற்றிய நினைவு அவனை வலுவாக வருத்துகிறது. அப்போது இலக்குவன் இராமனைத் தேற்றி விதியின் தன்மை பழுதில்லாமல் விளைந்தது. மற்றவைகளைப் பற்றி நினைத்துக் கவலைப்படுவதில் என்ன பயன்? அந்த அரக்கர்களைக் கொன்ற பின் அல்லவா நமது துயர்கள் அனைத்தும் தீரும் என்று ஆறுதல் கூறினான். இராமனும் அது கேட்டு அயர்வு நீங்கித் துயர் அடைவது அறியாமை தாதை கூறிய வழியில் செம்மையான செயல்களைச் செய்து முடிப்போம் என்று உறுதி கொள்கிறான். மேல் நடக்க வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்கத் தங்கள் பயணத்தை இருவரும் மேலும் தொடர்ந்தனர். பகல் போயிற்று. இராமபிரான் படும் துன்பங்களைக் கண்டு வருந்தி சூரியனும் மேற்குக் கடலில் நீரில் மூழ்கி மறைந்தான். தன் தமிழ்த் தென்றல் வீசும் மலைச் சாரல் பகுதியின் மீது விண்வெளியில் அழகிய சந்திரன் தோன்றினான். சீதையின் முகம் இராமனுக்கு வானத்தில் தெரிந்தது. அவ்வழகிய முகம் இராமனுடைய காதலைத் தூண்டியது, என்று கம்பர் குறிப்பிடுகிறார்.