பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 99 தென் திசை என்று குறிப்பிடுவது சிறப்பாகும். அத் தமிழுடைத் தென் திசையில் உள்ள பல மலைகளையும் ஆறுகளையும் கடந்துப் பெண்ணை நதியை அடைந்தனர். அதைத் தாண்டி திருவேங்கடத்தைக் கண்டனர். தொண்டை நாடு கடந்துப் பொன்னி நாடு அடைந்தனர். அச் சேறு நாறும் பொன்னி நாட்டைத் தாண்டி அங்கிருந்து இல்லறத்தின் பெருமை விளங்கும் மலை மண்டலத்தை அடைந்து அங்கிருந்து தென் தமிழ் நாடு சென்று அடைந்தனர் என்று கம்பர் குறிப்பிடுகிறார். 'அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ மனையின் மாட்சி குலாம் மலை மண்டலம் வினையின் நீங்கிய பண்பினர், மேயினார் இனிய தென் தமிழ் நாடு சென்ற எய்தினர் இங்கு மலை நாட்டை மனை மாட்சி நிறம்பிய அதாவது இல்லறத்தின் சிறப்பு நிறம்பிய சேர நாடு என்று கம்பர் குறிப்பிடுகிறார். 14. அனுமன் ஆற்றல் அனுமனும் அங்கதனும், சாம்பவானும் அவர்களது குழுவினரும், தென் திசையில் உள்ள நாடு நகரங்கள் ஆறுகள் சோலைகள் மலைகள் முகடுகள், குகைகள் முதலிய பல இடங்களிலும் தேடிச் சீதையைக் காணாமல் சோர்வடைந்து இலங்கையை நோக்கிய தெற்குக் கடற்கரையில் அமர்ந்து தேம்பிக் கொண்டிருந்தனர். “பூவரு புரிகுழல் பொருவில் கற்புடைத் தேவியைக் காண்கிலார்’ செய்வதொன்றும் அறியாமல் பேசவும் முடியாமல், வந்த காரியம் செய்து முடிக்க முடியவில்லையே என்று வருந்தித் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட தம் உயிர்க்கு இறுதி எண்ணினர். நான் சீதையைக் கண்டு பிடிக்காமல் ஊர் திரும்பினால் எந்தையும் முனியும், எம் இறை இராமனும் சிந்தை வருந்தும், என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். நீங்கள் போய் எந்தையிடம் கூறிவிடுங்கள் என்று அங்கதன் கூறினான்.