பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 107 'ாண்டினிது உறைமின் நீங்கள் இங்கேயே இனிது இருங்கள். 'யானே எறிகடல் இலங்கை எய்தி மீண்டும் இங்கே வருகிறேன். அதுவரை நீங்கள் இங்கேயே இருங்கள். உங்களிடம் விடை கொண்டேன்’ என்று அனைவரின் வாழ்த்துக்களுடன் விடை பெற்றுக் கொண்டு கடலைத் தாண்டுவதற்காக மகேந்திர மலையின் உச்சிக்குச் சென்றான். கடல் தாண்டுதல்: அங்கிருந்து அனுமன் திருமால் வாமனா வதாரத்தில் திரிவிக்கிரமனாகப் பெருவடிவில் வளர்ந்ததைப் போல உருவெடுத்து அனைவரும் காணும்படியாக உயர்ந்துக் கடலைத் தாண்ட விண் வெளியில் உயரக் கிளம்பினான். 'பொருவருவேலை தாவும் புந்தியான், புவனம் தாய பெருவடிவு உயர்ந்த, மாயோன் மேக்குறப் பெயர்த்தாள்போல உரு அறிவடிவின் உம்பர் ஒங்கினன், உவமையாலும் திருவடி என்னும் தன்மையாவர்க்கும் தெரிய நின்றான்' என்று கம்பர் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இங்கிருந்து கம்பர் நம்மைச் சுந்தர காண்டத்திற்குக் கொண்டு செல்கிறார். நம்பிக்கை மிக்க செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. நமது துன்பங்கள் எல்லாம் மறையும் காலம் வந்து விட்டது. அனுமன் ஆகாய மார்க்கத்தில் பாய்ந்துப் பறந்து செல்கிறான். தெய்விகக் கடமைகளை நிறைவேற்றுவதில் மிக்க ஆர்வம் கொண்டு வேகமாகச் சொல்கிறான். அப்போது ஒரு இடத்தில் கடலிலிருந்து மைந்நாக மலை எழுந்து வந்து குறுக்கே நின்றது. அது என்ன வென்று அயிர்த்து அனுமன் அதைத் தன் காலால் எட்டி உதைத்தான். அம்மலை தலைகீழப் புரண்டு விழுந்தது. அனுமன் மேலே கிளம்பினான். அம்மலையோ சிறு மானிட வேடம் பூண்டு 'எந்தாய் இது கேள். இந்திரன் மலைகளைச் சிதைத்தபோது காற்றரசன் என்னைக் காப்பாற்றினான். நீ, அக்காற்றரசனுக்கு அன்பிற்குரிய குமரன். ஆதலால் உனக்கு விருந்தளித்து இளைப்பாறச் செய்யலாம் என்று வந்தேன், என்றான். அனுமன் நான் தெய்வப் பணியில் செல்கிறேன். அப்பணி முடித்துத் திரும்பும் போது உன் விருந்தை ஏற்கிறேன்’ என்று கூறி விட்டு அங்கு நிற்காது கிளம்பினான். அனுமன் தனது அரும்பணி ஆற்றச் சென்று கொண்டிருந்த போது வேறு இரு இடையூறுகளும் நிகழ்ந்தன.