பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 115 சீதை இராம பிரானை நினைத்து எண்ண மிட்டு கொண்டிருப்பதைப் பற்றி, கம்பனுடைய அற்புதமான புகழ்மிக்க பாடல்கள்; o 'மெய்த்திருப்பதம் மேவு என்ற போதினும் இத்திருத்துறந்து ஏகு என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்' "ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, எம்பி நின் தம்பி, நீ தோழன்; மங்கை கொழுந்தி’ எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவாள்' 'உரங்கொள் தேம்மலர்ச் சென்னி. உரிமைசால் வரங்கொள் பொன்முடி தம்பி வனைந்திலன், திரங்கு செஞ்சடை கட்டிய செய்வினைக்கு இரங்கி ஏங்கியது எண்ணி இரங்குவாள்' “பரித்த செல்வம் ஒழியப் படரும் நாள் அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்து அவன் கருத்தின் ஆசைக் கரையின்மை கண்டு, இறை சிரித்த செய்கை நினைந்து அழும் செய்கையாள்' “மழுவின் வாளினன், மன்னரை மூவேழு பொழுதில் நூறிப் புலவு உறு புண்ணின்நீர் முழுகினான் தவமொய்ம் பொடு மூரிவில் தழுவும் மேன்மை நினைந்து உயிர் சாம்புவாள்” 'ஏகவாளி, அவ்விந்திரன் காதல் மேல் போக ஏவி, அது கண் பொடித்த நாள், காகம் முற்றும் ஒர் கண் இல ஆகிய வேக வென்றியைத் தன்தலை மேல் கொள்வாள்' "வெவ்விராதனை மேவு அரும் தீவினை வவ்வி, மாற்றரும் சாபமும் மாற்றிய அவ்விராமனை உன்னித் தன் ஆர்உயிர் செவ்விராது, உணர்வு ஒய்ந்து, உடல் தேம்புவாள்'