பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.4/eufl o அ.சீனிவாசன் 121 அவனுடைய ஆற்றலையும் ஆட்சி அதிகாரப் பெருமைகளையும் பற்றிக் குறிப்பிடுகிறான். இராவணன், ஜானகியிடம் முதலில் கெஞ்சிக் கெஞ்சிப் பேசுகிறான் 'எவ்விடத்து எனக்கு இன்னருள் ஈவது, நொவ்விடைக் குயிலே நுவல்க' என்று கெஞ்சுகிறான். இதைப் பற்றி, ஈசற்கு ஆயினும் ாடு அழிவுற்று இறை வாசிப்பாடு அழியாத மனத்தினான், ஆசைப்பாடும் அந்நானும் அடர்த்திடக் கூசிக் கூசி இணையன கூறினான்’ என்று இராவணன் ஆசையும் நாணமும் இணைந்துக் கூசிக் கூசிச் சீதையிடம் பேசியதாகக் கம்பன் மிக நுட்பமாகக் குறிப்பிட்டுக் கூறுகிறார். மேலும், இராவணனுடைய உள்ளத்திலிருந்து எழும் வார்த்தைகள் சீதை மீதான அவனுடைய ஆசைப் பெருக்கத்தையும் மறு பக்கம் கம்பீரத்தையும் குறையாமல் வெளிப்படுத்துகிறது. இன்றிருப்போர் நாளை இருக்க மாட்டார். நாளும் இளமையும் மீண்டும் வராது, என்பால் அருள் கொள்வாயாக. நான் இராமனைக் கொல்லும் போது அவனுடைய சாவுக்குரல் கேட்கும் வரை காத்திருக்கப் போகிறாயா? தேவாதி தேவர்கள் தேவியர்கள் எல்லாம் உன் காலடி தொழுது உனக்குச் சேவை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகின் ஒப்பற்றத் தலைமை உனக்குக் கிடைக்கப் போகிறது. அதை ஏன் நீ மறுக்கிறாய் என்றெல்லாம் பலதும் கூறிச் சீதையை வசப்படுத்துவதற்கான வார்த்தைகளை எடுத்துக் கூறுகிறான். இந்தத் தரமற்ற வார்த்தைகளைக் கேட்ட சீதை சீற்றத்துடன் அரக்கனை இகழ்ந்து பேசுகிறாள். 'எனது நாயகனுக்கு நேரில் வர பயந்து மறைந்து வந்து வஞ்சனையாக என்னை எடுத்து வந்தாய். அன்றுச் சடாயுவால் தரையில் வீழ்ந்தாய், தெய்வீக வாள் உன் கையில் இல்லாமல் இருந்திருக்குமானால் நீ அவனை வீழ்த்தியிருக்க முடியாது. வித்தக வில்லினார் உனது பத்துத் தலைகளையும் கொய்து உன்னைக் கொன்றுக் குவிக்கப் போகிறார். உன்னுடைய வாழ் நாளும் வரங்களும் எல்லாம் முடியப் போகிறது. எந்த விதக் குறைபாடுகள் இல்லாத வீரர்கள் ஆயினும் அவர்களும் மாண்டே போயினர். அறம் திறம் பினர்களும் மக்கட்கு அருள் திரம்பினரும் கூட இறுதியில் மாண்டே போயினர். தென் தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரும் இதர தீது தீர் முனிவர்களும், “அரக்கர்களுடைய கொடுமைகளும் அட்டகாசங்களும் அதிகரித்து விட்டன வென்றும், அதனால், நீ அவர்களை அழித்து