பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ഠ്ഞി 戰 o &TITTEFouT 139 'காட்டுவார் இன்மையால் காவினை வாட்டினேன். என்னைக் கொல்ல வந்தார்களை வீட்டினேன். பின்னம் மென்மையால் உன் மாட்டு வந்தது உன்னைக் கானும் மதியினால்’’ என்று மிக அடக்கமாகவே பதில் கூறினான். இராவணனுக்கு அதைக் கேட்டதும் அடங்காத கோபம் ஏற்பட்டது. 'அவனைக் கொல்லுங்கள்” என்று கத்தினான். உடனே வீடணன் நில்லுங்கள்’ என்று தடுத்து “துதரைக் கொல்லல் கூடாது' என்று கூற அதை ஏற்றுக் கொண்ட இராவணன் “இக்குரங்கின் வாலிலே தீயிட்டு ஊரைச் சுற்றி அடித்து விரட்டுங்கள்” என்றுரைத்தான். அரண்மனை அரக்கர்கள் அனுமன் வாலில் பந்தத்தைச் சுற்றி நெய்யை ஊற்றி நெருப்பை வைத்து விரட்டிவிட்டனர். இதைக் கேள்வியுற்ற சீதை நீயே உலகுக்கு ஒரு சான்று நிற்கே தெரியும்கற்பு, அதனில் துயேன் என்னின் தொழுகின்றேன் எளியே அவனைச் சுடேல்' என்றாள். அனுமனும் வாலில் இடப்பட்ட தீ தன்னைச் சுடாதது கண்டு சனகன் பாவைக் கற்பினால் இயன்றது' என்று கருதிக் களிப்படைந்தான். அனுமன் தனது வாலில் இட்டத் தியுடன் இலங்கையில் மாளிகை களுக்கிடையில் தாவிக் குதித்தான். அத்தீ, மாளிகைகளில் பற்றி எரிந்தது. எங்கும் நெருப்பும் புகை மண்டலமும் பரவி இலங்கை நகரம் எரிந்தது. அனுமனும் இலங்கையை விட்டு வெளியேறினான். அனுமன் வேகமாகப் பாய்ந்து சென்று தன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வானர வீரர்களுக்கு கிடையில் குதித்தான். அவர்களிடம் தான் சீதையைக் கண்ட செய்தியைக் கூறினான். அனைவரும் பெரு மகிழ்ச்சியடைந்து ஆனந்தக் களிப்புடன் கிட்கிந்தையை நோக்கி விரைந்தனர். போகும் வழியில் சுக்கிரீவனுடைய மதுவனம் ஒன்றையடைந்து அதில் புகுந்து காய் கனிகளையும் தேனையும் அருந்தி ஆரவாரம் செய்துவிட்டு சென்றனர். அனுமன் முதலில் வேகமாகப் புறப்பட்டான். இராமனை அடைந்தான். பெருமகிழ்ச்சியுடன் இராமபிரானிடம் பேசினான். தான் இலங்கை சென்று வந்த வெற்றிச் செய்தியை விவரித்துக் கூறினான்.