பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 153 மிகவும் நுட்பமாக எடுத்துக் கூறுகிறார். கருங்கடலின் குமுறல்களைக் காட்டிலும் இராமனுடைய நெடுமானமான உணர்வு, துயரம் சீதையின் பாலான காதல் ஆகியவைகளின் குமுறல்கள் மேலோங்கி நின்றன. இவ்வாறு இராமன் சீதையை நினைந்து நினைந்துத் துயரம் அடைந்தான். அவனுடைய மார்பில் மன்மதன் சரம் பாய்ந்தது. அதைப் பற்றி 'கரத் தொடும், பாழி மாக்கடல் கடைந்துளான் உரத்தொடும், கரனொடும் உயர ஓங்கிய மரத்தொடும் தொளைத்தவன், மார்பில், மன்மதன் சரத்தொடும் பாய்ந்தது, நிலவின் தாரை வாள்' என்ற கம்பன் குறிப்பிடுகிறார். சக்தி மிக்க இராமனுடைய பானங்கள் தாடகையை, கரதுடனர் களை, மாரீசனை, ஆச்சாமரங்களை, வாலியின் நெஞ்சைத் துளைத் திருக்கின்றன. அத்தகைய இராம பிரானுடைய வலுவான நெஞ்சை மன்மதனுடைய பானங்கள் துளைத்தன என்று கம்பன் குறிப்பிடுவது நம்மை உருக்குகிறது. இராமன் பெரும் துயரத்துடன் தன் உடலை நோக்குவான். தன் இன்னுயிரைப் பற்றியும் தனது வாழ்க்கையைப் பற்றியும் தனக்கு ஏற்பட்ட இடர்களைப் பற்றியும் சிந்தனை செய்வான். கடலை நோக்குவான். அந்த அரக்கன் இராவணன் வாழும் திடலை நோக்குவான். தனது வில்லை நோக்குவான். இவ்வாறு சிந்தித்தான் என்பதை. 'உடலினை நோக்கும், இன்னுயிரை நோக்கும்; ஆல் இடரினை நோக்கும்; மற்று யாதும் நோக்கலன்; கடலினை நோக்கும்; அக்கள்வன் வைகுறும் திடரினை நோக்கும்; தன் சிலையை நோக்கும்; ஆல்' என்று கம்பன் குறிப்பிடுகிறார். கடலில் சேதுவைக் கட்டி முடித்து இராமனும் இளவலும் வானரத் தலைவர்களும் படைகளும் அனைவரும் கடலைக் கடந்து இலங்கை நகரின் கோட்டை அருகில் சென்று படைவீடுகள் அமைத்து முகாம் இட்டனர். இதைக் கண்டுவர இராவணன் தனது ஒற்றர்களை மாறு வேடத்தில் அனுப்பி வைத்தான். அவ்வொற்றர்களும் வானரர் வடிவில் படையில் நுழைந்தனர். வீடணன் அவர்களை அடையாளம் கண்டு