பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 2=> காதலும் பெருங்காதலும் XX 'ஈசன்மேனியை, ஈரைந்து திசைகளை ஈண்டில் ஆசில் சேனையை, ஐம்பெரும் பூதத்தை, அறிவைப் பேசும் பேச்சினைச், சமயங்கள் பிணக்குறும் பிணக்கை, வாச மாலையாய்! யாவரே முடிவெண்ண வல்லார்?' என்று இராமன் இலக்குவனிடம் வியந்து கூறுவதைக் கம்பன் மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார். சீதையைத் தேடுவதற்காகத் தெற்கு நோக்கிச் செல்லும் படைக்கு வழி காட்டும் முகத்தான், அவ்வழியைப் பற்றிக் கூறுகையில் சுக்கிரீவன் திரு வேங்கட மலையைப் பற்றிக் குறிப்பிடும் போது 'வட சொற்கும் தென் சொற்கும் வரம் பாகி நான்மறையும் மற்றை நூலும் இடை சொற்ற பொருட் கெல்லாம் எல்லையாய் நல்லறிவுக்கு ஈறாய், வேறு புடை சுற்றும் துணையின்றிப் புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற உடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங் கடத்தில் சென்று உறுதிர் மாதோ' என்று திருவேங்கடத்தின் பெருமையைப் பற்றிச் சுக்கிரீவன் கூறுவதைக் கம்பன் பெருமையுடன் எடுத்துக் காட்டுகிறார். கம்பர் தனது பெருங்காவியம் முழுவதிலும் தமிழைப் பற்றி மிகவும் சிறப்பாகப் பெருமைப்படுத்திக் குறிப்பிடுகிறார். பொன்னியும் தமிழும், கம்பருடைய காவியத்தில் பல இடங்களிலும் உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. அகத்திய மாமுனிவரைப் பற்றிக் குறிப்பிடும் போது தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன் என்று பெருமையுடன் கூறுகிறார். இராமனைப் பற்றிக் குறிப்பிடும் போது "தென் சொல் கடந்தான் வட சொற்கலைக்கு எல்லை தேர்ந்தான்” என்று சிறப்புடன் குறிப்பிடுகிறார். வனத்தின் அழகிய காட்சிகளைச் சீதைக்குக் காட்டிக் கொண்டு செல்கிறான் இராமபிரான். அப்போது 'குழுவு நுண்துளை வேயினும் (சிறிய தொளைகளையுடைய வேங்குழுலைக் காட்டிலும்) குறி நரம்பு எரிவுற்று எழுவு தண் தமிழ் யாழினும் இனிய சொல்கிளியே” என்று சீதையைக் குறிப்பிடுகிறார்.