பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 240 >}=== காதலும் பெருங்காதலும் பொன்றினள் சீதை, என்றே போவார்கள் அவர்தாம்; அல்லால் வென்றிட முடியாது என்னும் வீரமோ விளம்பல்” என்றான்' என்றும் இராவணனுடைய உள்ளக் கிடக்கையை தன்மானத்தைத் தொட்டுப் பேசியதைக் கம்பன் மிகவும் நேர்த்தியாகத் தனது கவிதைகளில் எடுத்துக் கூறுகிறார். மூலபலப்படைத் தலைவர்களிடம் இராவணன் தனது மூலபலப் படைத்தலைவர்களிடம் அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்குப் பதில் கூறிப் பேசும் போது 'சீதை காதலின் பிறந்துள பரிசு எலாம் தெரித்தான்” என்று'சீதை என்று இருந்தவத்து இயைந்தாள் கற்புடைப் பத்தினி பொருட்டால் விதி விளைந்தது என்றும் சீதை என்பவள் தனை விட்டு அம்மனிதரைச் சேர்தல் ஆதியின் தலை செயத்தக்கது இனிச் செயல் அழிவாம்’ என்றும் விட்ட ஆயினும் மாதினை வெம்சமம் விரும்பிப்பட்ட வீரரைப் பெருகிலம்’ என்றும் குறிப்பிட்டு "செருத்தொழில் இனிச் செய்யும் கடமை என்று அவர்களிடம் முடிவு கூறுகிறான். மூலபலப்படை போரில் குதித்தது, இராமபிரான் தனது சக்திக் கணைகளால் மூலபலப்படை முழுவதையும் அழித்து விட்டான். மயல் அடங்கியது இராவணன் போருக்கு எழுந்தான் அவன் போருக்கெழுந்த அந்த கம்பீரத்தைக் கண்டு உலகமே வியந்தது. இராம இராவண இறுதிப் போர் துவங்கியது. தருமமும் அதர்மமும் மோதியது. இராகவனுடைய புனித வாளி இராவணனுடைய மார்பில் புகுந்து அவனுடைய உயிரைப் பருகிப் புறம் போயிற்று. அவனுடைய சினம் அடங்கியது. மனம் அடங்கியது. செயல் அடங்கியது. மயல் அடங்கியது. தம்மடங்கு முனிவரையும் தலையடங்கா நிலையடங்கச் செய்த நாளின் மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான் உயிர் துறந்த முகங்கள் அம்மா, என்று கம்ப நாடர் மிக அற்புதமாக இராவணன் வீழ்ச்சியின் காட்சியை நமக்குக் காட்டுகிறார். இராவணன் வீழ்ந்து கிடந்த போது வீடணன் பாசம் பொங்கி கண்ணிர் உகுத்தான். இராவணன் மாவீரன் தாயினும் தொழத்