பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 242 تدخيصلإح காதலும் பெருங்காதலும் இவ்வாறாகக் கம்பநாடர் அவருடைய உலகப் புகழ் மிக்க பெருங்காவியத்தில் கதை முழுவதிலும் பெருங்காதல் விளைவுகளைப் பற்றிப் பல்வேறு இடங்களிலும் பலவேறு கட்டங்களிலும் பலவேறு பாத்திரங்களின் மூலமான பல நிகழ்ச்சிகளிலும் குறிப்பிடுவதைக் காண்கிறோம். தசரதன், கைகேயி, இராமன், சீதை, இலக்குவன், சூர்ப்பனகை, வாலி, இராவணன் ஆகியோருடைய வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகளில் காதலும் பெருங்காதலும் பெண்ணாசையும் பெண்ணாட்டமும் ஆற்றும் செல்வாக்கும் தலையீடுகளும் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முக்கிய திருப்பங்களை எற்படுத்து கின்றன. அவைகள் மூலம் மனித வாழ்க்கைக்கு அவசியமான நீதி நெறி முறைகளும் ஒழுக்க நெறி முறைகளும் முன் வைக்கப் படுகின்றன. மனித குல நல்வாழ்விற்கும் முன்னேற்றத்திற்கும் அவசியமான நெறிமுறைகளும் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. காவியத்தில் தசரதச் சக்கரவர்த்தியிடம் கைகேயி பால் இருந்த காதல் மிகுதியைப் பற்றியும் அதன் விளைவைப் பற்றியும் அயோத்தி மக்கள் பேசுகிறார்கள். இலக்குவன் கோபத்துடன் பெண்ணாட்டம் கொள்ளேன் என்று குறிப்பிடுகிறான். இன்னும் பல இடங்களிலும் தசரதனுடைய காதல் மிகுதியைப் பற்றிக் கதையில் பல பாத்திரங்களும் பேசுகின்றன. இராமபிரானுக்கும் சீதாபிராட்டிக்கும் இடையிலான அன்பு, காதல் தெய்வீகத் தன்மை கொண்டது. ஆயினும் சீதையின் பால் இராமனுக்கு இருந்த அன்பு மிகுதி, காதல் மிகுதி, அவனை மாயமான் பின்னால் போக வைத்தது பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் கதைப் போக்கின் பல இடங்களிலும் பேசப்படுகின்றன. சடாயு மூலமும் மற்றும் இராமன், சீதை ஆகியோரின் கூற்றுகள் மூலமும் எடுத்துக் காட்டப்டுகின்றன. வாலி தனது ஆட்சியில் மனை மாட்சியை அழித்தது பற்றி இராமன் குறிப்பிடுவதும் வாலி தனது கடைசி காலத்தில் தனது செயல்களுக்கு வருந்துவதும் கிட்கிந்தா காண்டத்தில் முக்கிய கருத்தாக முன் வைக்கப்பட்டுள்ளது. சூர்ப்பனகைக்கு இராமன் பால் எற்பட்ட ஒருதலையான காதல் மிகுதி ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கதையில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. சூர்ப்பனகைத் தனது கணவன், இராவணனால்