பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 268 >}=== காதலும் பெருங்காதலும் 'மண்ணோடும் கொண்டு போனான்; வான் உயர் கற்பினாள் தன் புண்ணிய மேனி தீண்ட அஞ்சுவான்; உலகம் பூத்த கண்ணகன் கமலத்து அண்ணல் கருத்திலான் தொடுதல் கண்ணின் எண்ணரும் கூறாய் மாய்தி” என்பது ஓர் மொழி உண்டு என்பான்' என்றும் சீதையைக் கண்டது பற்றியும் அப்பிராட்டியின் மாட்சி பற்றியும் அனுமன் கூறுகிறான். இன்னும் அனுமன் ஜானகியைக் கண்ட தன்மையைப் பற்றியும் கூறுகிறான். "மாண்பு இறந்து அமைந்த கற்பின் வாள்நுதல், நின்பால் வைத்த சேண் பிறந்து அமைந்த காதல் கண்களில் தெவிட்டித் தீராக் காண் பிறந்தமையால், நீயே கண் அகல் ஞாலந் தன்னுள் ஆண் பிறந்து அமைந்த செல்வம் உண்டனை ஆதி அன்றே' என்றும், 'ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின் அருளும், செய்ய தூய நல் அறனும் என்று இங்கு இனையன தொடர்ந்து காப்பப் போயினன்; அரக்கி மாரைச் செல்லுமின் பொதுவின் என்று ஆங்கு ஏயினன்; அவர் எலாம் என் மந்திரத்து உறங்கி இற்றார்” என்றும் அனுமன் அசோக வனத்தில் நடந்த காட்சியைப் பற்றிப் பெருமையுடன் கூறுகிறான்.