பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii தொடர்ச்சியான விவாதப் பொருளாக இருந்து வந்திருக்கிறது. இதில் ஆங்கில (ஐரோப்பிய) சிந்தனை போக்குகளுக்கும் இந்திய சிந்தனை போக்குகளுக்கும் இடையில் அடிப்படையான மோதல் இருந்து வந்திருக்கிறது. இந்த மோதலில் பல அரசியல் கட்சிகளும் கூட உடைந்திருக்கின்றன. சுதந்திரம் அடைந்த போது இந்திய நாடும் உடைந்து, இந்தியா, பாகிஸ்தான் பின்னர் பாகிஸ்தானிலிருந்து பங்களா தேஷ் எனப் பிரிந்து பிளவு பட்டிருக்கின்றன. இந்திய நாட்டின் வெளி உறவுக் கொள்கை, இந்திய நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு, இந்திய மக்களின் ஒற்றுமை, நாட்டின் தற்காப்பு பலம், இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சி, விவசாயப் பிரச்சனை, உற்பத்தி பெருக்கம், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல், கல்வி, கலாச்சார முன்னேற்றம், மக்களின் சுகாதாரம் நல்வாழ்வு பல துறைகளிலும் நாட்டின் ஒன்றிணைப்பு, இந்திய மக்களின் ஆன்மீக பாரம்பரியத்தின் மேன்மை, ஒட்டு மொத்தமான அரசியல், பொருளாதார, சமுதாய, கலாச்சார, ஆன்மீக வளர்ச்சி பற்றிய பல வேறு பிரச்சனைகளும் எழுந்து அவைகளுக்குச் சரியான தீர்வு காண்பதில் இந்திய மக்களிடையில் நூறாண்டு காலத்திய ஆங்கிலக் கல்வி மூலம் ஏற்பட்ட மேலை நாட்டு சிந்தனைப் போக்குகளும், இந்திய சிந்தனைப் போக்குகளும், இந்திய பாரம்பரியத்தின் தொடர்ச்சியான இந்திய சிந்தனைப் போக்குகளும் எழுந்து அவை மோதியிருக்கின்றன. இன்னும் அது தொடர்கிறது. திரு. அ.சீனிவாசன் தன்னுடைய ஐம்பது ஆண்டு காலத்திற்கு மேலான பொது வாழ்க்கை, பத்திரிகைப் பணிகள், தொழிற் சங்கப் பணிகள், விவசாயிகளின் போராட்ட அனுபவங்கள் ஐந்தாண்டு திட்டங்களின் வளர்ச்சி போக்குகள் பற்றிய படிப்பு, இந்திய நாட்டின் அரசியல் வளர்ச்சி ஆகியவற்றின் அனுபவத்தில் தான் இதுவரை பணியாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சித்தாந்த சிந்தனை அரசியல் கொள்கைகள் அவைகளின் செயல்பாடு, அமைப்பு நிலைப் பணிகள், அணுகும் முறை ஆகிய பல பிரச்சனைகளிலும் தனக்குச் சொந்தமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அக்கட்சியிலிருந்து விலகி 1999 ஆம்