பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 7 புலனடக்கம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தவம் செய்வதற்குப் புலனடக்கம் மிகவும் அவசியமானதாகும். மருத நிலத்தின் ப்ண்புகள் பற்றிக் கம்பன் மிகச்சிறப்பாகக் கூறுமிடத்தில் மள்ளர்களும் (உழவர்களும்) கடைசியர்களும் (உழவர்குல மகளிரும்) மகிழ்ச்சியாக ஆடிப்பாடித் திரிவதைப் பற்றி மிகவும் அழகாகக் குறிப்பிடுகிறார். “பண்கள் மிழற்றும் இன்சொல் கடைசியர் பரந்த நீண்ட கண், கை, கால், முகம், வாய் ஒக்கும் களை அலால்களை இலாமை உண்கள்வார் கடைவாய் மள்ளர்களை இலாது உலாவி நிற்பார்; பெண்கள்பால் வைத்த நேயம் பிழைப்பரோ சிறியர் பெற்றால்’’ கோசல நாட்டு மக்கள் எல்லாம் மாண்பு மிக்கவர்களாக இருந்தார்கள். வான வெளியில் கருடன் பறந்து செல்லுபோது அதன் நிழலும் உடன் செல்லும். அதைப் போல இயல் இசைப் பயன்களை மக்கள் அனுபவித்து மகிழ்ந்தார்கள். மருந்தினால் நோய்கள் தீர்வதைப் போல தங்கள் அறிவுச் சந்தேகங்கள் தீர கல்வி கேள்விகளைக் கேட்டு மகிழ்ந்தார்கள். விருந்தினர் வந்தால் எவ்வாறு இல்லறத்தார் பெரு மகிழ்ச்சி கொள்வார்களோ அதைப் போலக் கோசல நாட்டு மக்கள் விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்ந்தார்கள். பொருந்திய மகளிரோடு வதுவையில் பொருந்தி நின்றார்கள் என்றும் கம்பன் குறிப்பிடுகிறார். வதுவையில் பொருந்தும் போது மகளிர் உளமாரப் பொருந்தி யிருக்க வேண்டும் என்பது ஆண் பெண் உறவில் மிக முக்கியமான கருத்தாகும். பிற மகளிர்பால் மட்டுமல்ல, சொந்த இல்லாளாயினும் உள்ளம் இசைவாக உள்ள நேரத்தில் கூடுவதே பொருத்தமானதாகும். கூடுவதற்கான பக்குவநிலை, பருவநிலை ஆகியவை மிக முக்கிய மானதாகும். இன்பத்திற்கு இசைவு மிக முக்கியமானது என்பதாகும். கம்பன் அக்கருத்தை மிக அழகாகக் குறிப்பிடுகிறார். இதில் பெண்பாலருக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களிலும் பெண்ணின் சம்மதத்திற்கு நமது பண்பாடு முதலிடம் கொடுத்துள்ளது. நமது சாத்திரங்களும் அதை வலியுறுத்திக் கூறுகின்றன. ருக்மணி தேவிக்கு அவளுடைய விருப்பத்திற்கு மாறாக அவளுடைய குடும்பத்தில் வேறிடத்தில் திருமணம் நிச்சயமாகிறது. அவள் ரகசியமாகக் கிருஷ்ணனுக்குத் தகவல் சொல்லி அனுப்புகிறாள். குல தெய்வத்தின் கோயிலுக்குத் தனியாகப் போகிறாள். கண்ணன் தனது தேருடன் அங்கு தயாராக