பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 16 *(=تحچّ காதலும் பெருங்காதலும் திருமால் தவம் செய்த இடத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது தங்கள் நாயகரைத் தெய்வம் எனக் கருதும் மங்கைமார் மனதைப் போலத் துய்மையான இடம் என்று கம்பன் குறிப்பிடுகின்ற, இக்கருத்து இங்கு கவனிக்கத் தக்கது. "தங்கள் நாயகரின், தெய்வம் தான் பிரிது இலை என்று எண்ணும் மங்கைமார் சிந்தை போல் தூயது; மற்றும் கேளாய்” எங்கள் நான் மறைக்கும், தேவர் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டாச் செங்கண்மால் இருந்து மேல் நாள் செய்தவம் செய்தது, அன்றே! என்று விசுவாமித்திரர் கூறுகிறார். விசுவாமித்திரர் தன் தவம் செய்யவிருக்கும் இடத்தைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அந்த இடம் மிகவும் தூய்மையானது தூய்மைக்கு உவமையாகத் தங்கள் நாயகரைத் தவிர வேறு தெய்வம் இல்லை எனக் கருதும் மங்கையர் உள்ளம் போலத் தூயது என்று கூறுகிறார். 'தெய்வம்தொழ அள்கொழு நற்றொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை' என்பது வள்ளுவர் வாக்கு. இத்தகைய பெண்கள் சிறப்புக்குரியவர்கள். பெண்களில் முதலிடம் பெறுகிறார்கள் என்பது கம்பன் கருத்து. அடுத்து அந்த இடம் திருமாலின் சிறப்பு நான்மறைகளுக்கும் தேவர்களின் அறிவிற்கும் பிறர்க்கும் எட்டாச் செங்கண்மால்' என்பது முனிவர் கூற்றாகும். H # 4 ** ** **