பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 15 'மன்னும் பல் உயிர் வாரித்தன் வாய்ப்பெய்து தின்னும் புன்மையின் தீமை எது? ஐய! பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள் என்னும் தன்மை எளிமையின் பாலதே!” என்று அத்தீமை நிறைந்தவளைப் பற்றி எடுத்துக் கூறி 'அவள் மீதுள்ள கோபத்தால் நான் இதைக் கூறவில்லை. நல்ல அறத்தை எண்ணியே இவளைக் கொல்லும் படி கூறுகிறேன்' என்றும் முடிவாக மாமுனிவன் எடுத்துக் கூறுகிறான். அதன் பின்னர் தாடகை விடுத்த சூலத்தைத் தனது கணைகளால் முறித்து அவள் வீசிய கற்களையெல்லாம் தடுத்து இராமன் தனது சுடு சரத்தை அவ்வரக்கி மீது ஏவினான். அச்சரம், 'சொல் ஒக்கும் கடிய வேகச் சுடுகரம், கரிய செம்மல் அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுத்தலும், வியிரக்குன்ற கல்ஒக்கும் நெஞ்சில் தங்காது அப்புறம் கழன்று, கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்று அன்றே’’ என்று கம்பர் குறிப்பிடுகிறார். தாடகை ஒரு பெண். ஆயினும் அரக்கி தீமையனைத்தின் முழு வடிவானவள். எனவே அவளைப் போரிட்டுக் கொல்வதும் தேவைப் படுகிறது. அவசியமாகிறது. இராமனுடைய இந்தப் போரைக் கன்னிப் போர் (முதல் போர்) என்று கம்பர் மிக நுட்பமாகவே குறிப்பிட்டுக் கூறுகிறார். இங்கு பெண்மை பற்றியும் தீது மிக்க பெண்கள் பற்றியும் தாடகை போன்ற அரக்கப் பெண்கள் பற்றியுமெல்லாம் சில நுட்பமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அரக்கத்தனமான பெண்கள் மீது உலகம் வெற்றி கொள்ள வேண்டிய அவசியத்தையும் காவியம் சுட்டிக் காட்டுகிறது. மங்கைமார் சிந்தை போலத் துயது. தாடகை வீழ்ந்த பின்னர் கோசிகன் தனது வேள்வியைத் தொடங்கத் தயாரானான். கோசிக நதிக் கரைக்கு மூவரும் சென்றனர். அங்கு முன்பு திருமால் அமர்ந்து தவம் செய்த இடத்தையும் மாபலியின் வரலாற்றைப் பற்றியும் முனிவர் இராமனுக்கு எடுத்துக் கூறுகிறார்.