பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 19 மறுபக்கம் அகலிகை தனது தவறைத் தெரிந்து செய்தாளா அத்தவறை உணர்ந்து செய்தாளா என்றும் கேள்வியும் எழுகிறது. அது பற்றிக் கம்பநாடர் 'புக்கு அவளோடும் காமப் புதுநல மதுவின் தேறல் ஒக்க உண்டு இருத்த லோடும், உணர்ந்தனள், உணர்ந்த பின்னும் தக்கதன்று என்ன ஒராள், தாழ்ந்தனள் இருப்பத், தாழா முக்கணான் அனைய ஆற்றல் முனிவனும் முடுகி வந்தான்' முதலில் மாறு வேடத்தில் தனது கணவன் வேடத்தில் வந்த இந்திரனை அகலிகை உண்மையை அறியவில்லை. தனது கணவன் என்றே கருதினாள். ஆனால் அவன் தன்னைக் கட்டித் தழுவிய போது அக்காமப் புதுநல மதுவின் தேறல் ஒக்க உண்டு இருந்த போது அவள் தன்னைத் தழுவுவது தனது கணவனல்ல அது இந்திரன் தான் என்பதை உணர்ந்தாள். இருப்பினும் அது தவறு என்று தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. தன்னை உட்படுத்திக் கொண்டு விட்டாள். கெளதம முனிவரும் அந்த மெல்லியலாளை பலவீனமானவளை நோக்கி விலைமகள் அனைய நீயும் கல்லியல் ஆதி’ என்று சாபமிட்டான். அவளோ தனது பிழைபொறுக்குமாறு வேண்டுகிறாள். சாபவிமோசனமும் கிடைக்கிறது. பூரீ ராமபிரானது கால்துகள் பட்டுக் கல்லாயிருந்த அகலிகை பழைய உயிர்வடிவைப் பெற்றாள். இராமன் அவளிடம், “மாதவன் அருள் உண்டாக அவனை வழிபடு. நடந்ததை எண்ணித் துன்புறாதே அன்னையே நீ போவாயாக’ என்று அவளைத் தனது கணவனிடம் போகும்படி இராமன் கூறுகிறான். அனைவரும் கெளதமனிடம் சென்று அவரை வணங்கி 'நெஞ்சினால் பிழைப்பிலாளை நீ அழைத்திடுக என்ன? "மாசறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கையிந்தான்’ என்று கம்பன் கவிதை குறிப்பிடுகிறது. “அவள் நெஞ்சாரத்தவறு செய்யவில்லை. நடந்த தவறுக்கு அவளும் தண்டனை பெற்று அது நிறைவேறி தண்டனை காலமும் முடிந்து விட்டது. தாங்கள் ஏற்றுக் கொள்ளவும்’ என்று இராமனும் விசுவாமித்திரனும் முனிவனிடம் எடுத்துக் கூறி கெளதமரையும் அகலிகையையும் இணைத்து வைத்தனர். இவ்வாறு இருபெரும் நிகழ்ச்சிகள் சுபமாக நிறைவேறுகின்றன. அதைக் கவிச் சக்கரவர்த்தி கம்பன் மிக அழகான தனது சிறந்த பாடல் மூலம் குறிப்பிடுகிறார்.