பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 30 حجدلإح - காதலும் பெருங்காதலும் உலக மக்களை உயிராகவும் அவ்வுயிர்களைத் தாங்கும் உடலாகவும் மன்னன் இருப்பானாகில் அவனுக்கு அறம் தவறாமல் பயன்தரும். உண்மையான அருள் நெறியில் நிற்கும் போது அவ்வரசனுக்கு வேறு வேள்விகள் தேவையில்லை. இனிய சொல்லினன், ஈகையுள்ளவன், நல்லெண்ணங்களும், ஆராய்ச்சிகளும், முயற்சிகளும், செயல்பாட்டுத் திறன்களும் உள்ளவன், தூய்மையானவன் (புறத்துய்மையும், அகத்துய்மையும் உள்ளவன்) சிறந்த குண நலன்களை உடையவன் வென்றியன், நினையும் நீதி நெறி கடவான் என்றால் அத்தகைய மன்னனுக்கு அத்தகைய தொரு நாட்டுத் தலைவனுக்குத் தாழ்வேயில்லை. அரசன் சீலம் அல்லனவற்றை நீக்க வேண்டும். பொன்னை நிறுக்கும் துலாக்கோலைப் போல தனி நிலை தாங்கி நிற்க வேண்டும். அத்தகைய மன்னர்கள் நல்ல அமைச்சர்களின் கருத்துக்களை நோக்கி அதன்படி நடந்தால் அந்த அரசர்களுக்கு நல்ல பார்வை கிடைக்கும் நல்ல அமைச்சர்கள் அரசனுக்குக் கண்களைப் போன்றவர்களாகும். இவ்வாறெல்லாம் வசிட்டர் இராமனுக்கு அரச நீதியைப் பற்றி எடுத்துக் கூறி முடிவாக 'து.ாமகேது புவிக்கெனத் தோன்றிய வாமமேகலை மங்கையரால் வரும் காமம் இல்லையெனில், கடும் கேடு எனும் நாமம் இல்லை, நரகமும் இல்லையே” என்று வசிட்டர் கூறி முடிக்கிறார். தூம கேது என்பது ஒரு வால் நட்சத்திரம். வால் நட்சத்திரம் காணப்பட்டால் பின்னால் ஏதோ ஒரு பெரிய தீமை நிகழ்வதற்கு அறிகுறி என்று கூறுவர். துமகேது வானில் தோன்றுவதற்கு ஒப்பாக அழகிய மேகலாபரணம் அணிந்த மங்கையரால் ஏற்படும் காமம் கூறப்படுகிறது. அத்தகைய காமத்திற்கு இடம் கொடாமல் அரசன் இருப்பானாகில் அப்போது கடும் கேடுகள் என்னும் அச்சமும் இல்லை நரகமும் இல்லை என்று வசிட்டன் கூறுகிறார். ஆட்சிப் பொருப்பில் உள்ளவர்கள் காமம் என்னும் பெருங்காதலைத் தவிர்த்தல் அவசியம் என்பதை அரசியல் அறிவுரையாகவே கம்பன் கூறுவதை இங்கு காண்கிறோம். அரசியல் மற்றும் ஆட்சிப் பொருப்பில் உள்ளவர்களுக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது. கம்பன் இக்கருத்தைப் பல இடங்களிலும் எடுத்துக் கூறுகிறார்.