பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 51 சீதை அவளைக் கண்டு அஞ்சி இராமனின் தோள்களைத் தழுவிக் கொண்டாள். விளையாட்டு வினையாகி விடும் என்றும் கருதி இராமனும் சூர்ப்பணகையிடம் “இளையவன் வந்தால் கோபப்படுவான், நீ இந்த இடத்தை விட்டுப் போய்விடு' என்று கூறிவிட்டுச் சீதையுடன் பர்னக சாலைக்குள் போய்விட்டான். காமக்கனல் மூண்டதால் சூர்ப்பணகையின் காமக்கனல் அதிகமாகிறது, “இன்று இவன் ஆகம் (மார்பை) புல்லேன் எனின் உயிர் இழப்பேன்’ என்று கூறிப் புழுங்குகிறாள். "அழிந்த சிந்தையளாய் அயர்வாள் வயின் மொழிந்த காமக் கடுங்கனல் மூண்டதால் வழிந்த நாகத்தின் வன்தொளை வாய் எயிற்று இழிந்த கார்விடம் ஏறுவது என்னவே” சூர்ப்பனகையின் சிந்தை அழிந்தது. அயர்வடைந்தாள். கருநாகத்தின் கடியால் கடும் விஷம் ஏறுவதைப் போல அவள் உள்ளத்தில் எழுந்தக் காமக்கனல் மூண்டு எரியத் தொடங்கியது. கோபம் கொண்டுச் சீதையைத் தொடர்ந்தாள். அப்போது அங்கு இருந்த இலக்குவன் கோபம் கொண்டு 'நீல்லடி” எனக்கூறி அவளைத் தடுத்து அவளது “மூக்கு, காது மற்றும் முலைக் கண்களை அறுத்து விரட்டினான். சூர்ப்பனகை அழுது புலம்பினாள் கதரினாள் “பெண்பிறந்தேன் பட்ட பிழை” எனப் பிதற்றினாள். தனது அண்ணன் மார்களையும் வல்லமை மிக்க மருகன் இந்திர ஜித்தனையும் கூவிக்குரல் கொடுத்து அழத் தொடங்கினாள். அவளுடைய அழுகுரலைக் கேட்டு இராமன் வெளியே வந்து என்ன நடந்தது எனக் கேட்டான் 'இவள் சீதையைப் பற்றியிழுக்க ஒடினாள்' என்று இலக்குவன் கூறினான். அதற்கு “என் இனியவருக்கருகில் மற்றவளைக் கண்டால் என் மனம் ஒப்புமா?” என்று சூர்ப்பனகை கூறினாள். இதைக் கேட்ட இராமனுக்குச் சற்று கோபம் ஏற்பட்டு, நீ இங்கு இருக்காதே, இந்த வனத்தை விட்டு ஒடிப் போய்விடு என்று சற்று கடிந்தே கூறினான். சூர்ப்பனகை மேலும் தோடர்ந்து வாதாடுகிறாள்.