உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

இக்காலத்தில் கம்பராமாயணம் படிக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு அதன் பரிமாணம் இன்னொரு தடையாக இருக்கிறது. பதினாயிரம் விருத்தங்கள் என்றால் இக்காலத்தில் மலைப்பாகப் போய்விட்டது. இந்தச் சமுத்திரத்தை நாமெங்கே தாண்டப் போகிறோம் என்று அநேகர் அதில் இறங்காமல் இக் கரையிலேயே நின்றுவிடுகிறார்கள். இப்படி இருப்பதால், கம்பனைப் படித்து அனுபவிப்பவரின் தொகையைச் சீக்கிரம் அதிகப்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தை எப்படி நிறைவேற்றலாம் என்று யோசித்ததில் இரண்டு வழிகள் புலப்பட்டன. அவைகளில் ஒன்று, ராமாயணத்தில் மிக உயர்ந்த கவிகளையாகப் பொறுக்கியெடுத்து ஒரு தொகுதியாக அச்சிடலாம் என்பது. மற்றொன்று, விடத்தக்க உபாக்கியானங்களை விட்டும், அங்கங்கே அதிவிஸ்தாரமாகக் காணப்படுகிற


களும் உபாத்தியாயர்களும் ஆயிருக்கிற சில பெயர்கள் அந்த சுவடிகளில் பயன் இல்லாத சந்தியையும் விகாரத்தையும் விலக்கி, பயன் உள்ள சந்தியையும் விகாரத்தையும் வைத்துக்கொண்டு, அதுகள் அச்சிற் பதிப்பிக்கப்பட்டிருக்கையினாலே, இத்தமிழ் ஆனது, லோகத்துக்கு உபகாரம் ஆக வேணும் என்று நமது முன்னோர்கள் நினைத்தபடிக்கு நாங்கள் பிரயோசனம் கண்டோம். ஆகையால் அப்படியே இதிலும் செய்யப்படவேணும் என்று எம்மைக் கேட்டுக்கொண்டார்கள்.. இதுவும் அல்லாமல் தமிழ் இலக்கணம் படித்தும், பல சொற்களுக்கும் உறுப்புகளுக்கும் சொன்ன பொது விதிகளையும் சில சொற்களுக்கும் உறுப்புக்களுக்கும் சொன்ள சிறப்பு விதிகளையுங்கொண்டு, இன்ன இடத்திலே சந்தியாவது விகாரமாவது வேண்டும், இன்ன இடத்திலே அது வேண்டாம், என்று ஓர்ந்து உணர்ந்து, பயன் உள்ள சந்தியையும் விகாரத்தையுமே அனுசரித்து, நமது முன்னோர்கள் கருதியபடிக்கு, லோகோபகாரத்தை நிலை நிறுத்தாமல், பயன் இல்லாத் சந்தியையும் விகாரத்தையுமே எங்கெங்கும் அனுசரிக்கப் புறப்