பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

சர்வ சாதாரணமாயிருக்கிறது. அராபியக் கதைக ளெல்லாம் "அரூன் அல்ரஷீத் காலத்திலே" என்று ஆரம்பிப்பதை எல்லோரும் பார்த்திருப்பார்கள். நம் நாட்டுக் கதைகளிலும் "அசோகன் காலத்திலே" என்றும், "விக்கிரமார்க்கன்” காலத்திலே என்றும், "போஜராஜன் காலத்திலே" என்றும் ஆரம்பிக்கிற கதைகளை நீக்கிவிட்டால் மிகுதியுள்ள கதைகள் மிகச் சொற்பமாகத்தானிருக்கும். காளிதாசன் விக்கிரமாதித்தன் காலத்திலிருந்தான் என்று ஒரு கதை கூறும். அவன் போஜராஜன் காலத்தவன் என்று மற்றொரு கதை சொல்லும். காளிதாசனும், பவபூதியும் ஏககாலத்தவர் என்பது நமது பழைய பண்டிதர்களின் கொள்கை. ஆனால் இவ்விருவருக்கும் மத்தியில் குறைந்தது இரண்டு நூற்றாண்டுகள் உண்டு என்று சில நவீன பண்டிதர்கள் கூறுகிறார்கள். ஔவையார், திருவள்ளுவர் காலத்திலும், நக்கீரர் காலத்திலும் இருந்தாள் என்று தமது கர்ண பரம்பரைகள் சொல்லுகின்றன. அப்படியானால் அவள் சுமார் 800 வருஷம் ஜீவித்திருந்தாளெனக் கொள்ளவேண்டி வரும். இப்படிக்கெல்லாம் இருப்பதினால் கம்பனும் ஒட்டக் கூத்தனும் வேறு வேறு காலத்தவர்களாயிருந்தால் கர்ணபரம்பரைகள் அவர்களை ஏககாலத்தவர் என்று சொல்லா என்று சொல்ல இடமில்லை.

கர்ண பரம்பரையாக வந்தன என்று சொல்லப்படும் கதைகளிலநேகங்களைப் பொழுதுபோகாமலிருக்கிற பண்டிதர்களால் சமயோசிதமாகக் கற்பிக்கப்பட்ட வையாகத்தான் மதிக்கவேண்டும் என்று பின்வரும், நாம் கர்ணபரம்பரையில் கேட்ட, கதையே நமக்குக் காட்டும். கம்பன் ஒட்டக்கூத்தனுடைய பொறாமைக்குச் சற்று நேரத்திற்காகிலும் ஒரு ஆறுதல் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், மாறுவேடம் பூண்டு அவனிடம் சென்று கம்பன் இறந்து விட்டான் என்று சொன்னானாம். அது கேட்டதும், ஒட்டக்கூத்தன்,