உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

இன்றைக்கோ கம்பன் இறத்த நாள் ! என் கவிதை
இன்றைக்கோ அரசு அவைக்கு ஏற்கும் நாள்!—இன்றைக்கோ
பூ மடந்தை வாழ, புவி மடந்தை வீற்றிருக்க,
நா மடந்தை நூல் வாங்கும் நாள்!

என்று பாடவே, பாட்டின் அரத்தினால் கம்பன் அங்கேயே உயிரற்று விழுந்து விட்டானாம். ஒட்டக்கூத்தன் உடனே பரிதபித்துக்கொண்டு அரத்தை மாற்றி,

இன்றைக்கோ கம்பன் எழுந்த நாள் ! என் கவிதை
இன்றைக்கோ அரசு அவைக்கண் ஏறா நாள்! —இன்றைக்கோ
பூ மடந்தை வாழ, புவி மடந்தை வீற்றிருக்க,
நா மடந்தை நூல் பூட்டும் நாள் !

என்று திருப்பிப் பாடினதும் கம்பன் உயிர்பெற்றெழுந்து விட்டானாம்.*[1]

ஆனால் “இன்றைக்கோ கம்பன் இறந்த நாள்" என்று துவங்கும் வெண்பாவானது, தமிழ் நாவலர் சரிதையில் சிறிது மாற்றப்பட்டு, "கம்பன் சோழனால் கொலையுண்டான் என்று கேட்ட புலவர்கள் பலராலும் பாடப்பட்டது" என்ற தலைப்பின் கீழ் வருகிறது.

அப்படியே சோழன் வில்லால் அடிபட்டு வீழ்ந்த காலத்தில் கம்பன்,


  1. அரம் பாடியதும் கம்பன் இறந்து விழுந்தானென்றும், மாற்றிப் பாடியதும், கம்பன் பிழைத்தெழுந்தான் என்றும் கூறும் கதையானது, "ப்ஹோஜராஜே தீவம் தே"என்று காளிதாசன் சொன்னதும், மாறுவேடம் போட்டு வந்து 'போஜன் இறந்தான்' என்று பொய்யாகச் சொல்லிய போஜன் பிணமாய் விழுந்துவிட்டான் என்றும், அதை மாற்றி "ப்ஹோஜராஜே ப்ஹீவம் ததே" என்று சொன்னதும் போஜனுக்கு உயிர்வந்து விட்டது என்றும், சொல்லும் கதையைப் பார்த்துத் தமிழ்ப் பண்டிதர் கற்பித்திருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் தோன்றும்.