20
வில் அம்பு சொல் அம்பு மேதகவே ஆனாலும், வில் அம்பின் சொல் அம்பு வீறு உடைத்து;— வில் அம்பு பட்டு உருவிற்று என்னை; என் பாட்டு அம்பு நின் குலத்தைச் சுட்டு எரிக்கும் என்றே துணி! என்று ஓர் அரம் பாடினான் என்று தமிழ் நாவலர் சரிதையில் சொல்லப்படுகிறது. ஆனால், இது, பாண்டியன் அம்பாலடிக்க ஔவை பாடியதாகக் கூறும்,
வில் அம்பு சொல் அம்பு மேதினியில் இரண்டு உண்டு;
வில் அம்பின் சொல் அம்பே மேல் அதிகம் ;— வில் அம்பு
பட்டது, அடா, என் மார்பில், பாண்டியா நின் குலத்தைச்
சுட்டது, அடா, என் வாயின் சொல்!
என்ற பாட்டைச் சிறிது மாற்றிக் கம்பன்மேல் ஏற்றினதாக இருக்கிறதே ஒழிய வேறில்லை. இந்தக் கதைகள் சம்பந்தப்பட்ட வரையில் தமிழ் நாவலர் சரிதையின் கதைகள் தான் ஆதிக் கதைகள் என்று ஏற்பட்டாலும், கர்ணபரம்பரைகள் விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று இவை காட்டுகின்றன என்பதற்கும் சந்தேகமில்லை.
இனி ஒட்டக்கூத்தனையும் கம்பனையும் சேர்த்துக் கூறும் கதைகளைச் சற்று ஆராய்வோம்.
புதுவைச் சடையன் பொருந்து சங்கரனுக்கு
உதவித் தொழில் புரி ஒட்டக்கூத்தனை,
என்று ஆரம்பிக்கும் வரிகள், புதுவைக்கு அதிபதியான "சடையனுக்குப் பந்துவான' சங்கரனிடம், ஓட்டக்கூத்தன் உதவித்தொழில் புரிந்து வந்தான் என்று சொல்லுகிறன். கம்பனுடைய நண்பனாகிய சடையப்ப வள்ளலுடைய தகப்பனுக்குச் சங்கரன் என்று பெயர். இதனால் இந்தச் சங்கரனிடம் தான் ஒட்டக்கூத்தன் வேலைபார்த்தான் என்று சொல்லப் படுகிறது.*[1] ஆனால் பாட்டன் பெயரைப் பெயரனுக்கு
- ↑ " செந்தமிழ்", தொகுதி; பக்கம்.