பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

ஒட்டக்கூத்தன் ஆக்ஷேபித்தானம். கம்பனும்; "நானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்" என்று சொல்லிவிட்டு சாஸ்வதியைத் தியானிக்க, அவள் கற்பித்ததின் பிரகாரம் ஒட்டக்கூத்தனையும் அரசனையும் தன்னோடு இடைத் தெருவுக்கு அழைத்துக் கொண்டு போனானாம். அங்கு இடைச்சிபோல் வந்திருந்த கலைவாணி தன் குழந்தைகளைப் பார்த்து "துமி தெறிக்கும் எட்டவிடுங்கள்” என்று கூறியதை ஒப்புக் கண்டு ஒட்டக்கூத்தன் ஒப்புக்கொண்டுவிட்டானாம்.

மற்றொரு கதை இதுவாம். கம்புனுடைய ராமாயணத்தின் பெருமையைக்கண்டு ஏங்கி, கூத்தன் தன் ராமாயணத்தை முதலிலிருந்து கிழித்துக்கொண்டு வருகையில், அகஸ்மாத்தாய் அவ்வழிபோன கம்பன், கூத்தன் வீட்டினுன் சென்று, உத்தரகாண்டம் சிதைவுறாமல் நிற்பதைப் பார்த்து, "நான் உத்தர காண்டம் பாட உத்தேசிக்கவில்லையாதலால், தங்களுடைய உத்தரகாண்டத்தைக் கிழிக்காமல் வைத்து என் ஆறு காண்டங்களோடு சேர்த்து வைக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டானாம். கூத்தனும் அதற்கு இணங்கி அதை நிறுத்திக்கொண்டானாம். ஆனாலும் ஒட்டக் கூத்தனுடை அழுக்காறும் அகங்காரமும் நிறைந்த சுபாவத்தைக் கவனிக்கும் போது, கம்பன் அவன் காலத்தவனாய் இருந்தால் அவனிடம் இம்மாதிரி வார்த்தை சொல்ல துணிந்திருப்பான் என்றாவது, அப்படியே கம்பன் சொல்லியிருந்தாலும் ஒட்டக் கூத்தள் அதற்குச் சம்மதித்திருப்பான் என்றாவது நினைக்க முடியவில்லை.

தவிர, சோழ மண்டல சதகத்தில், பூண் நிலாவும் கம்பன் நலம் பொலியும் தமிழால் பொலிவு எய்திக் காணும் ஆறு காண்டம் உறும் கதையின் பெரிய கதை என்னும், தாள் நிலாவும் கழல் அபயன் சபையில் பயில் உத்தார கண்டம், வாணிதாசன் அரங்கேற்ற வைத்தார் சோழமண்டலமே, என்று வருகிற செய்யுள்