பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

வாணிதாசன் என்ற புனைபெயர் பூண்ட ஒட்டக்கூத்தன் தன் உத்தரகாண்டத்தை அபயன் என்னும் சோழ அரசன் சபையில் அரங்கேற்றினான் என்று கூறுகிறது. ஆனால் நாம் மேலே சொன்ன கதையில் ஏதேனும் உண்மையிருந்தால் ஒட்டக்கூத்தன் தன் உத்தரகாண்டத்தை அரங்கேற்றக் கூசியிருப்பான் என்று தோன்றுகிறது. இந்தப் பாட்டில் ஒட்டக்கூத்தன் முதல் ஆறு

காண்டங்களைப் பாடியதாகச் சொல்லாதிருப்பதும் கவனிக்கத் தகுந்தது.🞸[1] அபயன் என்பதும் சகம் 992 முதல் 1040 வரையில் அரசாண்ட உபயகுலோத்தமன் என்கிற


  1. அரகேசரி என்றொரு கவி "ரகுவமிசம்" என்றொரு காவியம் பாடியிருக்கிறான். அதில் அவன் "செந்தமிழ் " 44-இல் எடுத்துக் காட்டியபடி

    பொன் தாமரை மான் ஒழியாது பொலியும் மார்ப—
    எல் தாங்கு மேனி ரகு ராம சரிதை யாவும்
    கற்று, ஆர்கலியின் பெரிது ஆம் தமிழ்க் கம்ப நாடன்
    உற்ற ஆங்கு உரைத்தான் : உரையாதன ஓதுகிற்பாம்,

    என்று சொல்லிவிட்டு உத்தரகாண்டக் கதைகளைச் சொல்லத் துவக்குகிறான். இவன் காலத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆனால் இவன் காலத்தில் ஒட்டக்கூத்தரின் உத்தரராமாயணம் இருத்திருந்தால் ஒன்று அதையும் பாடி இருக்கமாட்டான், அல்லது அதைப்பற்றி இந்த இடத்தில் புகழ்ச்சியாகவோ இகழ்ச்சியாகவோ பேசியிருப்பானாகையால், இவன் கம்பனுக்கும், ஒட்டக்கூத்தனுக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்திருப்பான் என்றும், இதிலிருந்து ஒட்டக் கூத்தன் இவன் காலத்துக்குப் பிற்பட்டவன் என்றும் வாதிக்க ஏது இருக்கிறது. பண்டிதர் இவர் காலத்தை நிர்ணயிக்க முயலுவது அவசியம்.