பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


புரட்சி வீரர்
பாரிஸ்டர் வ. வே.ஸு. ஐயர்

1910 அக்டோபர் 9-ம்தேதி மாலை சூரியன் மறையும் நேரம்.

புதுச்சேரி துறைமுகத்தில் அப்பொழுதுதான் வந்து நங்கூரம் பாய்ச்சி நின்ற கப்பலிலிருந்து இறங்கிய ஒரு முஸ்லீம் கனவான் ஒரு சிறிய கைப்பெட்டியுடன் தேசீயப் பத்திரிகை “இந்தியா” காரியாலயத்தை நோக்கி விரைந்து, அதன் உரிமையாளரான ஸ்ரீ. ஸ்ரீ. ஸ்ரீனிவாசாரியாரிடம், ரோமாபுரியிலிருந்து தான் அனுப்பிய மஹாகவி தாந்தேயின் “தெய்வீக நாடகம்” என்ற புஸ்தகம் வந்து சேர்ந்ததோ என வினாவிய போதுதான் லண்டனிலும், பிரான்ஸிலும் பிரிட்டிஷ் ஸ்காட்லண்ட் ஒற்றர்களால் இடையராது இரண்டு வருஷங்களுக்கு மேலாக கண்காணிக்கப்பட்டிருந்தும், லண்டன் முதல் புதுச்சேரி வரை 10,000 மைல்கள் பஞ்சாபி சிங் போலவும், முஸ்லீம் போலவும், பற்பல வேடங்கள் பூண்டு, வேடனுக்குத் தப்பி குகைக்குள் புகும் சிங்கம் போன்று வந்தவர் வ.வே. ஸு. ஐயர் என அவரது நண்பர்களாலேயே பரிந்துகொள்ள முடிந்தது.

திருச்சி கரூரை அடுத்த சின்னாளபட்டி கிராமத்தில் 1881 ஏப்ரல் 2-ம் தேதி பிறந்த வரகனேரி வேங்கிடேச ஸுப்ரஹ்மண்ய ஐயர் தகப்பனாருக்கு முதல் புதல்வர். வளர்ந்தது திருச்சி வரகனேரி, படித்தது ஸெயின்ட் ஜோஸப் கல்லூரி. 12-ம் வயதில் மாகாணத்தில் முதலாக மெட்ரிகுலேஷன் தேறிய வருடமே அத்தை மகளைத் திருமணம் செய்து கொண்டார். 16-ம் வயதில் B. A. வகுப்பில் மாகாணத்தில் முதலாகத் தேறி, 19-ம் வயதில் வக்கீல் தொழில் துவங்கி 5 வருடங்கள் திருச்சியிலும், 1906-ல் ரங்கூனில் தொழில் செய்து தன் மைத்துளரான ”ரங்கூன் பசுபதி "ஐயரால் 1907-ல் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் அனுப்பப்பட்டார். ஆனால் அங்கு சென்ற சில நாட்களுக்குள் மாபெரும் தேச பக்தரும், தேசத்திற்காக 14 ஆண்டுகள் அந்தமான் தீவில் சிறை இருந்த வீரருமான சாவர்க்காரின் நட்பு, ஐயரையும் ஒரு எரிமலை ஆக்கியது.

இங்கிலாந்திலேயே பிரிட்டிஷாருக்கு எதிராகப் பற்பல சதிசெய்ததிற்காகவும், அங்கேயே மதன்லால் திங்கரா என்ற பஞ்சாயி மாணவனைக்கொண்டு ஸர் கர்ஸன் வைவி என்ற .