உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(iii)

ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக்‌ கொல்லத்‌ தாண்டியதற்‌காகவும்‌, கைது செய்யப்படும்‌ தறுவாயில்‌, பஞ்சாப்‌ சிக்கியர்‌ போன்ற தன்‌ தோற்றத்தால்‌ V. V. 5. என்ற எழுத்துக்கள்‌ ”வீர்‌ விக்ரம்‌ சிங்‌” என்ற தன்‌ பெயரைக்‌ குறிப்பதாக அவ்‌வொற்றர்களிடையே கூறி, அசர வைத்து, பிரான்ஸ்‌ தேசம்‌ தப்பிச்‌ சென்றபோது அவர்‌ தன்னிடம்‌ பத்திரமாக எடுத்துச்‌ சென்றது சிறிது ரொக்கமும்‌, ஒரு மாற்று உடையும்‌, இந்தியாவிலிருந்து தான்‌ இங்கிலாந்துக்கு எடுத்துச்சென்ற கம்பராமாயணமும்‌ மட்டுமே எனின்‌, அவரது கம்பன்‌ பற்று எத்தனை என்பது ஒருவாறு ஊகிக்கலாகும்‌.

பிரான்ஸிலிருந்து, ரோம்‌, கீரீஸ்‌, துருக்கி, எகிப்து வழியாக, பலவித வேடங்கள்‌ புனைந்து புதுச்சேரி வந்து சேர்ந்தது ஒரு தனிப்பெரும்‌ கதையாகும்‌.

1914 - 1918 முதல்‌ ஐரோப்பிய யுத்தம்‌ குமுறிக்‌ கொண்டிருந்த சூழ்நிலை. பிரிட்டிஷாரின்‌ வற்புறுத்தலால்‌, ஆப்பிரிக்காவிலுள்ள பிரஞ்சு அல்ஜீரிய நாட்டிற்கு ஐயரை நாடு கடத்திவிடுவதாக அரசு அச்சுறுத்தின சமயம்‌, அவசர அவசரமாக, அவர்‌ திருக்குறள்‌ 1990-ஐயும்‌ 1914இல்‌ ஆங்கிலத்தில்‌ மொழி பெயர்த்தும்‌, கம்பராமாயணத்தின்‌ ஒரு பகுதியை சந்தி பிரித்து, குறிகளுடனும்‌ 1917இல்‌ வெளியிட்டபோது எழுதிய கம்பராமாயண ஆராய்ச்சிக்‌ கட்டுரைதான்‌ இந்த வெளியீடு.

கரிபால்டி, மாஜினி, சந்திரகுப்த சரித்திரம்‌, புக்கர்‌ வாஷிங்டன்‌ சரித்திரம்‌, இலக்கியத்‌ துறையில்‌ ”மங்கையற்‌கரசியின்‌ காதல்‌ முதலிய கதைகள்‌” என்ற கொத்து, நெப்போலியனது யுத்த தந்திரங்களையும்‌, பாரதத்தில்‌ வரும்‌ யுத்த வ்யூக விபரங்களையும்‌ கோர்த்து, சுயராஜ்யத்திற்காக கொரில்லா யுத்தம்‌ நடத்த ரரணுவ சாஸ்திர புஸ்தகம்‌ ஒன்று, தேசபக்தி மக்களுக்கு பீரிட்டு எழவேண்டுமென இவர்‌ எழுதியவற்றில்‌ சிலவாகும்‌.

யுத்தம் முடிந்தபின்‌ எல்லா அரசியல்‌ கைதிகளுக்கும்‌ 1920-ல்‌ பிரிட்டிஷ்‌ அரசு பொது மன்னிப்பு அளித்தபோது புதுச்சேரியை விட்டு சென்னை வந்து ”தேசபக்தன்‌” என்ற தமிழ்த்‌ தினசரியின்‌ ஆசிரியராக இருந்து ராஜ்‌ துவேஷமாக எழுதிய குற்றத்திற்கு பெல்லாரிமில்‌ சிறை இருந்தபோது ஆங்கிலத்தில்‌ கம்பராமாயணத்தை உலக மகா காவியங்‌களுடன்‌ ஒப்பிட்டு 4000 செய்யுள்களுக்குமேல்‌ ஆங்‌கில கவிதைகளாகவே புனைந்தும்‌ எழுதிய ஆராய்ச்சிநூல்‌ முன்னர்‌

தில்லி தமிழ்ச்‌ சங்கத்தாராலும்‌, தற்போது, பம்பாய்‌ பாரதீய வித்யாபவன்‌ வெளியீடாகவும்‌ வந்திருக்கிறது.