உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(iv)

அவரது குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு சமீபத்தில்தான் அமெரிக்க கலிபோர்னியாவிலும், நியுயார்க்கிலும், லண்டனில் இரு கம்பெனிகளாலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

44 ஆண்டுகள் மட்டும் உலகில் வாழ்ந்த இந்த இலக்கிய மேதை, தியாக வீரர், திருநெல்வேலி ஜில்லா சேர்மாதேவியில் தமிழ் குருகுலம் நடத்திவந்த சமயம் அம்பா சமுத்திரம், பாபநாசத்தில், கல்யாணதீர்த்தத்தில் தவறி விழுந்த தன் மகள் சுபத்திராவைக் காக்க முயற்சிக்கையில், 3-6-1925-ல் தானும் வீரமுடிவு அடைந்தார். “ஸ்ரீ ஐயர் அவர்கள் இணையற்ற தீரர் ஒரு மாபெரும் தபஸ்வி, மகான், மேதை, சீலம் மிக்கவர். பண்பென்ற சொல்லுக்கே இலக்கணமாய் அமைந்தவர். நெருப்பு போன்ற ஒழுக்கம் உடையவர். மகாயோகீச்வார். பிழம்பை அடக்கிவைத்து இருக்கும் எரிமலை போன்றவர். மனித உருவில் உலகில் உலவிவந்த தெய்வம். கல்வியைக் கரைகண்டவராயினும் கல்விச் செறுக்கற்றவர். அன்பு அவரது மென்மையான இதயத்தின் நாதம். வீரம் அவர் கண்களில் வீசிய ஒளி.”

2-4-1971.

டாக்டர் வ. வே. ஸு கிருஷ்ணமூர்த்தி.


சோழ அரசர்கள் ஆண்ட காலமாவன:

விஜயபாலன் சுமார் சகம் 762 796
ஆதித்தன் ,, ,, 796 816
குலோத்துங்கன் என்னும் பராந்தகன் ,, ,, 816 837
அபயன், உபய குலோத்துங்கன் என்னும் சிலாசாசனிகளின் முதல் குலோத்துங்கன் ,, ,, 992 1040
விக்கிரமன் சிலாசாசனிகளின் இரண்டாம் குலோத்துங்கன் ராஜராஜன் ஒருவர்பின் ஒருவராக ,, 1040 1112