பக்கம்:கம்ப ராமாயண ஆராய்ச்சிக் கட்டுரை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

சோழர்கள் தமிழ் நாட்டில் தலைமை வகிக்கவில்லை என்றும் ஏற்படுகிறது என நினைக்கிறோம்.*[1]

கதைகள் கம்பனுக்கும் ஒரு குலோத்துங்கனுக்கும் சமகாலத்துவம் கற்பிக்கின்றன. தென்னாற்காடு ஜில்லா நாராயண வனத்திலுள்ள அகஸ்தியேச்சுவரன் கோவிலில் சகம் 429ம் வருஷமானது. ஒரு குலோத்துங்க சோழனுடைய 11வது ஆட்சி வருஷமாக இருந்தது என்று காட்டும் சாசனம் ஒன்று இருக்கிறதென்று ஸ்ரீமான் ரா. ராகவையங்கார் எடுத்துக் காட்டுகிறார்.ǂ[2] சகம் 407 இல் ராமாயணம் அரங்கேற்றிய கம்பன் சகம் 416 இல் குலோத்துங்கன் என்ற பெயரும் கொண்ட முதல் பராந்தகன் அவையிலும் பிரகாசித்தான் என்று சொல்லுவதில் அசம்பாவிதம் ஒன்றும் இல்லை.

தவிர, கம்பன் ஸ்ரீரங்கத்தில் ராமாயணம் அரங்கேற்றிய சபையில் ஸ்ரீமந் நாதமுனிகள் தலைமை வகித்தார் என்று கர்ண பரம்பரை சொல்லுகிறது.


  1. மன்னவனும் நீயோ? வள நாடும் உன்னதோ?
    உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் ? — என்னை
    விரைந்து ஏற்றுக்கொள்ளாத வேந்து உண்டோ?
    குரங்கு ஏற்றுக்கொள்ளாத கொம்பு? (உண்டோ

    என்றும்,

    காதம் இருபத்து நான்கு ஒழியக் காசினியை
    ஓதக்கடல் கொண்டு ஒளித்ததோ? - மேதினியில்,
    கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா, நீ முனிந்தால்
    இல்லையோ எங்கட்கு இடம் ?

    என்றும் கம்பள் சோழனைக் கண்டித்துப் பாடியிருக்கிறதில் இருந்து, அவன் காலத்தில் சோழ ராஜ்ஜியம் மிகக் குறுகியதாயிருந்தது என்று ஏற்படும்.

  2. வேறு அநேக சாசனங்களில் இந்த அரசன் பெயர் பராந்தகன் என்று வருகிறது. இவன் சிங்காதனம் ஏறியது அகம் 429 இல் என்று ஸ்ரீமான் கோபிநா தாரயர் எழுதுகிறார்.