30
அரங்கேற்றிய காலத்துக்குச் சுமார் இருபது வருஷங்களுக்கு முன்னால் கம்பன் ராமாயணம் பாட ஆரம்பித்தான் என்று வைத்துக் கொண்டால் கம்பன் விஜயாலய சோழன் காலத்தில் அல்லது அவனுக்குப் பின் ஆண்ட ஆதித்த சோழன் காலத்தில் அந்தக் காவியத்தைப் பாடிவந்தான் என்று ஏற்படும். இந்தச் சோழர்களும் மற்ற தமிழ் நாட்டரசர்களையும் ஒன்று சேர்த்துக்கொண்டு பல்லவர்களோடு கடும் போர் புரிந்து வந்தார்களாம். தமிழ் நாட்டுக்குச் சுதந்திரம் கொடுக்க முயன்ற பெருந்தகைகளைப் பற்றி, சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன் தேவாரத்தில் ஓரிடத்தில் பேசியிருப்பது போலக் கம்பன் பேசவில்லை என்பது விசனிக்கத் தக்கதே. ஆனால் சடையப்ப வள்ளலைப் பாடிய அளவு கம்பன் ராமாயணத்தில் சோழர்களைப் பாடவில்லையாகையால் அவன் பாடிய காலத்தில்
வர்களிடமிருந்து. கம்பராமாயணத்தைப் பெயர்த்து எழுதுவோர், இதற்குச் சேராத, குணாதித்தன் மகன் எழுதிய ராம கதையைச் சேர்ந்த, இந்த வெண்பாவைக் கம்பராமாயணத்தின் இறுதியில் சேர்த்தெழுதியிருக்கலாம். தவிர இந்தக் குணாதித்தன் சேயும் கம்பன் வமிசத்தவனாக இருந்தும் இருக்கலாம். அப்படி இருந்தால், இந்தப்பாட்டு இடம் மாறிக் கம்பராமாயணத்துக்கு வருவதற்குக் காரணங்கள் அதிகப்படும். எதற்கும், நூல் செய்த காலத்தைக் குறிப்பிடும் பாட்டுக்கள் நூல்களின் துவக்கத்தில் தான் வருகிறது வழக்கமாதலாலும், இந்த வெண்பாவில் நம் கம்பனுடைய பெயர் இல்லாததாலும், ஊரும் தகப்பன் பெயரும் மாறாக இருப்பதாலும், இந்த வெண்பா நமது விவகாரத்தில் ஒன்றையும் விளக்கவில்லை என்று தீர்மானிக்கிறோம்.